லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

சிறப்புகள்:
'இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்'. (அல்குர்ஆன் 97:1-3)
சிறப்புகள்: 1. அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவு. 2. ரமளான் மாதத்தில் ஒரு இரவு 3. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு.

அது எந்த இரவு?:
'..ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி - 722)

'நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவர்களுடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப்பத்து நாட்களில் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூற்கள்: முஸ்லிம், அஹ்மது)

மேற்கண்ட ஹதீஸ்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.

'லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

இந்த ஹதீஸில் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் அது இருக்கிறது என்றும் மேலும் சில ஹதீஸ்களில் குறிப்பிட்ட நாளின் இரவில் அது இருக்கிறது என்றும் வந்துள்ளது. இருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டதால் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் தேடுவதே சிறந்ததாகும்.

லைலத்துல் கத்ரை தேடுவது:

'நபி (ஸல்) அவர்கள் மற்ற நாட்களில் முயற்சிக்காத அளவு கடைசிப் பத்து நாட்கள் முயற்சிப்பார்கள்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: இப்னுமாஜா, அஹ்மது, திர்மிதி 726)

லைலத்துல் கத்ர் இரவில் வணக்க வழிபாடு:

'ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரை (வணக்கத்தில் ஈடுபடுவதற்காக) விழித்திருக்கச் செய்வார்கள்' இதை அலி (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி 725, அஹ்மது)

(இஃதிகாப்) பள்ளியில் தங்குதல்:

'நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்'. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: திர்மிதி 720, அஹ்மது)

இரவு வணக்கமும் பாவமன்னிப்பும்:

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி 619, அபூதாவூது, முஅத்தா)

லைலத்துல் கத்ரின் துஆ:

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي

பொருள்: 'இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!'


லைலத்துல் கத்ர் இரவின் முழுமையான பயனை அடைந்து கொள்ள ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் முயற்சிப்போமாக! அதற்கு அல்லாஹ் நமக்கு உதவிடுவானாக!

காஃபிர்களுடன் நடந்து கொள்ளும் முறை

இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர ஏனைய மதங்களும் இஸங்களும் அசத்தியமானவை. அவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் காஃபிர்களாவர். இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம். அதை பின்பற்றக்கூடியவர்கள் முஃமின்கள், முஸ்லிம்களாவர்.

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன்: 3:19)

‘இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவனிடமிருந்து அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக இருப்பான். (அல்குர்ஆன்: 3:85)

இதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத அனைவருமே காஃபிர்கள் என்று ஒரு முஸ்லிம் கருத வேண்டும். காஃபிருடன் பின்வரும் ஒழுக்கங்களைப் பேணி நடக்க வேண்டும்.
1. அவனுடைய நிராகரிப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதைப் பொருந்திக் கொள்ளவும் கூடாது. ஏனெனில் இறைநிராகரிப்பை பொருந்திக் கொள்வதும் இறைநிராகரிப்பாகும்.

2. அவனை வெறுக்க வேண்டும். அல்லாஹ் அவனை வெறுப்பதனால். ஏனெனில் விருப்பும் வெறுப்பும் அல்லாஹ்வுக்காகவே இருக்க வேண்டும். தன்னை நிராகரிக்கின்றான் என்பதற்காக அல்லாஹ் அவனை வெறுக்கும் போதெல்லாம் அல்லாஹ் வெறுக்கிறான் என்பதற்காக ஒரு முஸ்லிமும் அவனை வெறுக்க வேண்டும்.

3. அவனை நேசிப்பதும் அவனிடம் நட்பு கொள்வதும் கூடாது. எனெனில் அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கையாளர்கள் (தங்களைப்போன்ற) இறைநம்பிக்கையாளர்களை விடுத்து இறைநிராகரிப்போரை (ஒருபோதும் தம்) நேசர்களாய் ஆதரவாளர்களாய் ஆக்கிக் கொள்ள வேண்டாம். (அல்குர்ஆன்: 3:28)

அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை வைத்திற்கும் மக்கள், அல்லாஹ்வையும் அவன் தூதரையும் எதிர்ப்பவர்கள் மீது அன்பு செலுத்துவதை (நபியே!) நீர் காணமாட்டீர், அத்தகையோர் அவர்களின் தந்தையராயினும் அல்லது அவர்களின் தனயர்களாயினும் அல்லது அவர்களுடைய சகோதரர்களாயினும் அல்லது அவர்களுடைய குடும்பத்தினராயினும் சரியே! (அல்குர்ஆன்: 58:22)

4. காஃபிர் முஸ்லிமை எதிர்த்துப் போராடக் கூடியவனாக இல்லையென்றால் முஸ்லிம் அவனிடம் நீதமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வதுடன் அவனுக்கு நன்மையே செய்ய வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ, உங்களை உங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும் நீதியுடனும் நடப்பதை அல்லாஹ் தடுக்கவில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன்: 60:8)

5. பொதுவாக எல்லோரையும் போலவே அவனிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். உதாரணமாக அவனுக்குத் பசித்தால் உணவளிக்க வேண்டும். அவனுக்குத் தாகம் ஏற்பட்டால் தண்ணீர் கொடுக்க வேண்டும் அவன் நோயுற்றால் மருத்துவம் செய்ய வேண்டும். அல்லது அழிவிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டும். மேலும் அவனுக்கு ஏற்படும் துன்பம், தொல்லைகளை நீக்க வேண்டும்.

ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பூமியிலுள்ளவர்களுக்கு நீ இரக்கம் காட்டு. வானத்திலிள்ளவர்கள் உனக்கு இரக்கம் காட்டுவார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: தப்ரானி, ஹாகிம்

6. அவன் முஸ்லிமுடன் போரிடக்கூடியவனாக இல்லையென்றால் அவனுடைய பொருளுக்கும் மானமரியாதைக்கும் பங்கம் விளைவிக்கக் கூடாது.அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என் அடியார்களே! அநியாயம் செய்வதை எனக்கு நானே தடை செய்துள்ளேன். உங்களுக்கு இடையேயும் இதை தடை செய்திருக்கிறேன் எனவே உங்களில் ஒருவர் மற்றவருக்கு அநியாயம் செய்ய வேண்டாம். அறிவிப்பவர்: அபூதார்(ரலி), நூல்: முஸ்லிம்

7. அவனுக்கு அன்பளிப்பு வழங்குவதும் அவன் தரும் அன்பளிப்பை ஏற்றுக் கொள்வதும், அவன் யூத, கிறிஸ்தவனாக இருந்தால் அவனது உணவை உண்பதும் ஆகுமானதே.

‘வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவு உங்களுக்கு ஆகுமாக்கட்டிருக்கின்றது’ என அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்: 5:5)

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனுடைய விருந்திற்கு அழைக்கப்பட்டார்கள். அந்த அழைப்பை ஏற்று அவர்கள் தந்த உணவை உண்டிருக்கிறார்கள்.

8. முஃமினான பெண்ணை அவனுக்கு மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. ஆனால் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் பெண்களை மணந்து கொள்வது கூடும்.

அல்லாஹ் கூறுகிறான்: இறைவனுக்கு இணைவைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் கொள்ளும்வரை ஒரு போதும் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன்: 2:221)

‘முஃமினான நல்லொழுக்கமுடைய பெண்களையும் உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட நல்லொழுக்கமுள்ள பெண்களையும் விலைப் பெண்டிராகவோ ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது அவர்களுக்குரிய மஹ்ரைக் கொடுத்து மணமுடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது’. (அல்குர்ஆன்: 5:5)

9. அவன் தும்மி அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறினால் அவனுக்காக, யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹீ பாலகும் (அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டி உனது நிலையை சீர்படுத்துவனாக) என்று கூற வேண்டும்.

ஏனென்றால் நபி(ஸல்)அவர்களிடம் யூதர்கள் தும்பும் போது அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவார்கள் – யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக) என நபி(ஸல்) அவர்கள் தங்களுக்காக கூற வேண்டுமென எதிர் பார்த்தவாறு. ஆனால் நபி(ஸல்) அவர்களோ யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹீ பாலகும் என்றே கூறுவார்கள்.

10. அவனுக்கு முந்திக்கொண்டு ஸலாம் சொல்லக் கூடாது. அவன் ஸலாம் கூறினால் பதில் கூறலாம்.

அல்லாஹ் கூறுகிறான்: உங்களுக்கு (ஸலாம்) என்னும் வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதைப் போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள். (அல்குர்ஆன்: 4:86)

வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் வ அலைக்கும் என்று கூறுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) -புகாரி,முஸ்லிம்.

(குறிப்பு:- வேதக்காரர்கள் முஸ்லிம்களுக்கு ஸலாம் கூறினால் அஸ்ஸாமு அலைக்கும் (உங்கள் மீது நாசம் உண்டாகட்டும்) என்று கூறுவதுண்டு. அப்படிக் கூறும் போது மட்டும் வ அலைக்கும் (உங்கள் மீதும் நாசம் உண்டாகட்டும்) என்று பதில் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நபிமொழியில் ஆதாரம் உண்டு)

11. அவனைக் கடந்து செல்லும்போது பாதையின் ஒரத்திற்கு அவனைத் தள்ள வேண்டும்.

ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூத, கிறிஸ்தவர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் சொல்லாதீர்கள். அவர்களை நீங்கள் ஒரு பாதையில் சந்தித்தால் பாதையின் ஒரத்திற்கு அவர்களைத் தள்ளுங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்

12. (கலாச்சாரத்திலும் பழக்கவழக்கங்களிலும்) அவர்களுக்கு மாறு செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒப்பாக நடக்கக்கூடாது.

நபி(ஸல்) கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தினருக்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல்: அபூதாவூது.

நபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள்

“சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமாகும் எனக் கூறிய மார்க்கம் இஸ்லாமாகும்.

இதே வேளை, சிரிப்புத்தான் வாழ்க்கை எனும் அளவுக்கு ஒருவனது வாழ்வு அமைந்து விடக் கூடாது. எம்மைப் பார்த்துப் பிறர் சிரிக்கும் நிலைக்கும் எமது வாழ்வு இறங்கி விடவும் கூடாது. சிரிப்பு பிறர் மத்தியில் எமக்கிருக்கும் ஆளுமையைக் குறைத்து விடவும் கூடாது. இதுவும் கவனிக்கத் தக்கதாகும்.

பொதுவாக ஆன்மீகவாதிகள் என அறியப்பட்டவர்கள் பிறர் மத்தியில் அதிகம் சிரிக்க மாட்டார்கள். அது தமது இமேஜைப் பாதிக்கும் எனப் பயப்படுவர். மார்க்க ஈடுபாடுள்ள பலரும் சிரிக்காமலும், அதிகம் கதைக்காமலும் இருப்பதுதான் ஆன்மீகத்துக்கு அழகு என்று எண்ணுகின்றனர். எனவே, இவர்கள் பிறருடன் அதிகம் கதைப்பதில்லை; கலகலப்பாக இருப்பதில்லை. சிரித்தாலும் பதிலுக்குச் சிரிக்கக் கூடப் பஞ்சப்படுவார்கள்.

இருப்பினும், மிகப் பெரிய ஆன்மீகவாதியான நபி(ஸல்) அவர்கள் நண்பர்களுடன் சரி-சமமாகவும், சகஜமாகவும் பழகியுள்ளார்கள். எல்லாப் பணிகளிலும் தோழமையுணர்வுடன் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளார்கள். எப்போதும் அவர்களது பொன் முகத்தில் புன்னகை தவழ்ந்துகொண்டேயிருக்கும். அதிகமான சந்தர்ப்பங்களில் வாய் விட்டுச் சிரிக்க மாட்டார்கள். வாய் விட்டுச் சிரித்த சந்தர்ப்பங்களும் உள்ளன.

சிரிப்பு – அந்தச் சிரிப்பைச்
சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு!
என்றொரு சிரிப்புப் பற்றிய பழைய பாடலை அதிகமானவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். எந்தச் சிரிப்பைச் சீர்தூக்கிப் பார்க்காவிட்டாலும் நபி(ஸல்) அவர்களது சிரிப்பு அவசியம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாகும். நபிகளாரின் சிறிப்புப் பற்றிய ஆய்வின் மூலம் இஸ்லாமிய சட்டங்களை அறியலாம். இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையை அறியலாம். நபி(ஸல்) அவர்களது தூய ஆன்மீக வழிகாட்டலை அறியலாம். அவர்களது அற்புதமான பண்பாட்டை அறியலாம். குணத்தின் குன்றாகவும், பண்பாட்டின் சிகரமாகவும் அவர்கள் மிளிரும் அற்புதத் தன்மையை அறியலாம்.

இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் சிரித்த சில சம்பவங்களையும் அவற்றின் மூலம் நாம் பெரும் சட்டதிட்டங்கள், இஸ்லாமிய வழிகாட்டல்கள் குறித்தும் இந்தத் தொடரில் விபரிக்கலாம் என எண்ணுகின்றேன். நிச்சயமாக இது சுவையான, சுவாரஷ்யமான அனுபவமாக அமையும் என எண்ணுகின்றேன்.

தவறைச் செய்து விட்டு தர்மம் பெற்றுச் சென்றவர்:
“நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை!” என்றார். “தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “இல்லை!” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை!” என்றார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த “அறக்” எனும் அளவை கொண்டுவரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். “நான்தான்!” என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா(நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது, நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள். (புகாரி 1936)

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த நபிமொழி இஸ்லாமியச் சட்டமொன்றைத் தெளிவுபடுத்துகின்றது. நோன்பு என்பது அதிகாலை ஸுபஹின் ஆரம்ப நேரத்திலிருந்து மாலை மஅரிபின் ஆரம்ப நேரம் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவில் ஈடுபடாமலிருக்கும் ஒரு இபாதத்தாகும்.

நோன்பு நோற்ற நிலையில் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டால் அவர்;

-1- ஒரு அடிமையை உரிமை விட வேண்டும்.

-2- அதற்கு முடியாவிட்டால் 60 நோன்புகள் தொடராக நோற்க வேண்டும்.

-3- அதற்கும் முடியாவிட்டால் 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை இச்சம்பவத்தின் மூலம் அறிகின்றோம்.

இந்த அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் நோன்புடன் உடலுறவில் ஈடுபட்டவரிடம் பேசுகின்றார்கள்.

நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர் “நான் அழிந்து விட்டேன்!” என்று கூறிய போதிலும், நபி(ஸல்) அவர்கள் நிதானமாக “என்ன நடந்தது?” என்று கேட்கின்றார்கள். பதட்டத்துடன் வந்தவரது பதட்டத்தைப் போக்குகின்றார்கள். இந்த உரையாடலைத் தொடர்ந்து அவதானித்தால் நபி(ஸல்) அவர்களது நிதானமான போக்கையும், அன்பான அரவனைப்பையும் உணர முடியும்.

பொதுவாக, ஏதாவது “தவறு செய்து விட்டேன்; அதற்குப் பரிகாரமென்ன?” எனக் கேட்டு ஓர் ஆன்மீகவாதியை அணுகிக் கேட்டால் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திச் சாமிகள் அறுக்க முடிந்த வரை அறுத்து விட்டுத்தான் விடுவார்கள்.

குற்றங்களுக்கு இஸ்லாம் பரிகாரம் காணும் போது அந்தப் பரிகாரம் சமூகத்திற்குப் பயனுள்ளதாகவும் குற்றத்தில் ஈடுபட்டவருக்குப் பக்குவத்தை அளிப்பதாகவும் இருக்கும் வண்ணம் கவனம் செலுத்துகின்றது.

இந்த அடிப்படையில் “ஒரு அடிமையை விடுதலை செய்ய முடியுமா?” எனக் கேட்கின்றார்கள். அன்று மனிதர்கள் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு மிருகங்கள் போன்று சந்தைகளில் விற்கப்பட்டனர். அவர்கள் மிருகங்களை விட மிக மோசமாக நடத்தப்பட்டார்கள். பல குற்றச் செயல்களுக்கு இஸ்லாம் பரிகாரம் கூறும் போது அடிமை விடுதலையை வலியுறுத்தியது. அடிமையை வாங்கி, அவனை விடுதலை செய்வது சிறந்த நன்மையாக இஸ்லாத்தில் போதிக்கப்பட்டது.

இவர், அதற்கு “முடியாது!” என்றதும் “60 நோன்புகள் தொடராக நோற்க முடியுமா?” எனக் கேட்கின்றார்கள். இது குற்றம் செய்தவரை ஆன்மீக ரீதியில் பக்குவப்படுத்தும் பயிற்சியாகும். பல குற்றச் செயல்களுக்கு இதனை இஸ்லாம் பரிகாரமாக்கியுள்ளது.

ஏற்கனவே 30 நோன்புக்குள் குறித்த குற்றத்தைச் செய்து விட்டு வந்தவர் இவர். 60 நோன்புகள், அதுவும் “தொடராக நோற்க வேண்டும்!” என்று கூறிய போது, “அதற்கு நான் சக்தி பெற்றவனில்லை!” என்று கூறுகின்றார்.

“அதற்கு முடியாதென்றால் 60 ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமா?” என நபி(ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். தற்கால ஆன்மீகவாதிகள், தமது ஆசிரமத்திற்கு “அதை-இதைச் செய்! பாவம் தீர்ந்து விடும்! தீட்டுக் கழிந்து விடும்!” என்று கூறியே கோடி-கோடியாகச் சொத்துச் சேர்த்து வைத்துள்ளனர். இஸ்லாம், ஒருவன் குற்றம் செய்து விட்டால் அந்தக் குற்றங்கூடச் சமூகத்திற்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் எனப் பார்க்கின்றது. எனவே, 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டுமெனச் சட்டம் கூறுகின்றது. பொதுவாக ஏழைகளுக்கு உணவளிப்பதை இஸ்லாம் சிறப்பித்துள்ளது. பல குற்றச் செயல்களுக்குப் பரிகாரம் கூறும் போது 60, 10 ஏழைகளுக்கு உணவளிப்பதைப் பரிகாரமாக்கியுள்ளது. பொதுவாக விருந்துகள் என்று வந்து விட்டால் ஏழைகள் விடுபடுகின்றனர். செல்வந்தர்கள்தான் அழைக்கப்படுகின்றனர். இத்தகைய விருந்து முறையை இஸ்லாம் கண்டிக்கின்றது. ஏழைகள் விடுபட்டுச் செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் விருந்துதான் விருந்துகளிலேயே மோசமான விருந்தென்பது இஸ்லாத்தின் பார்வையாகும். இஸ்லாம் பரிகாரமாகக் கூறிய விருந்து என்பது செல்வந்தர் விடப்பட்டு, ஏழைகள் மட்டுமே கவனத்திற்கொள்ளப்படக் கூடிய விருந்தாகும்.

குறித்த இந்த 3 பரிகாரங்களையும் செய்ய முடியாத பரம ஏழையாகவும், பலவீனமானவராகவும் இவர் இருக்கின்றார். இருப்பினும் இவரது உள்ளம் தூய்மையான உள்ளமாகவும் இருக்கின்றது.

இவர் தூய உள்ளத்தையுடையவர் என்பது ஹதீஸில் நேரிடையாகக் கூறப்படாவிட்டாலும் நபி(ஸல்) அவர்களது பார்வை விசாலமானது. நுணுக்கமானது. இவரது பரிசுத்தத் தன்மையை நபி(ஸல்) அவர்கள் தனது விரிந்த பார்வையூடாகப் புரிந்துகொள்கின்றார்கள்.

இவர் தனது மனைவியுடன் உறவு கொண்டது இவருக்கும், இவரது மனைவிக்கும், அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த விடயமாகும். இதை இவர் மறைத்து விட்டு இவர் பாட்டில் இருந்திருக்கலாம். இருப்பினும் தற்செயலாகத் தவறு நடந்து விட்டது; நடந்த தவறுக்குப் பரிகாரம் காண வேண்டும் என இவரது உள்ளம் ஏங்குகின்றது. எனவேதான், வெட்கத்தையும் பொருட்படுத்தாமல் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தான் அழிந்து விட்டதாக அறிவிக்கின்றார். நபி(ஸல்) அவர்களைத் தனிமையில் சந்தித்துக் கூட இதை அவர் கூறவில்லை. நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் இருக்கின்றார்கள். இவரது உள்ளம் இவரையுறுத்தியதால் மக்கள் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் சபையில் வந்து நடந்ததைக் கூறிப் பரிகாரம் கேட்கின்றார் என்றால், இவர் பரிசுத்தமானவர் தானே! திட்டமிட்டுக் குற்றஞ்செய்யும் குணம் இவரிடமிருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டாரல்லவா?

ஒரு மனிதன், தான் செய்த தவறுக்காக வருந்துகின்றான் என்றால், அதற்கு உரிய முறையில் பரிகாரம் காண முற்படுகின்றான் என்றால், அதுவே பாவ மீட்சிக்கான வழியாக அமைந்து விடுகின்றது.

‘எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி நிர்ப்பந்திப்பதில்லை’ என்பது இஸ்லாத்தின் பொதுவான கோட்பாடாகும். குர்ஆனின் பல வசனங்கள் இந்தப் பொது விதியைப் பற்றிப் பேசுகின்றன. இந்தப் பொது விதி இங்கே கடைபிடிக்கப்படுகின்றது.

‘இவருக்கு எந்த வசதியும் இல்லை’ என்று கூறிய பின்னர் நபி(ஸல்) அவர்களே ஈத்தம் பழங்களைக் கொடுத்து தர்மம் செய்யச் சொல்கின்றார்கள். தர்மம் எமது குற்றங்களுக்குப் பரிகாரமாக அமையும்.

செய்ய வேண்டியதையெல்லாம் செய்து விட்டு, தர்மம் செய்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதற்காக இந்தக் கருத்தை இஸ்லாம் கூறவில்லை. தவறுதலாகக் குற்றம் நிகழ்ந்து விட்டால் அல்லது கடந்த காலக் குற்றங்களுக்குப் பரிகாரம் பெறுவதற்கு தர்மம் சிறந்த வழி என்பதையும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அந்த நபித் தோழரின் வறுமை நிலை புலப்படுகின்றது. “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழைக்கு, என்னை விடத் தேவையுடையவருக்கு தர்மம் செய்யச் சொல்கின்றீர்களா? மதீனாவில் இந்த இரு மலைகளுக்கு மத்தியில் என் குடும்பத்தை விட ஏழையோ, தேவையுடையவரோ இல்லை!” என்று கூறுகின்றார்.

அவர் பாவித்த வார்த்தையை இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால், என் மனைவியைப் போன்ற தேவையுடையவர் வேறு எவரும் இருக்க முடியாது என்ற கருத்தில் கூறுகின்றார். இவரது இந்த வார்த்தையைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் சிரிக்கின்றார்கள்; தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் வரை சிரிக்கின்றார்கள்.

பொதுவாக, ஒருவர் தவறு செய்தால் அவர் மீது கோபங்கொள்வதுதான் மனித இயல்பாகும். அதிலும் ஆன்மீகவாதிகள் தாம் பெரிய பக்குவப்பட்டவர்கள் என்பதைக் காட்டக் கடுமை காட்டுவர். குறிப்பாகத் தான் போதித்த போதனைக்கு ஒருவர் தவறு செய்து விட்டார் எனும் போது வெறுப்பு இன்னும் அதிகமாகும். அதனால் ஆரம்பம் முதல் இறுதி வரை நபி(ஸல்) அவர்கள் அம்மனிதரிடம் கோபத்தையோ, வெறுப்பையோ காட்டவில்லை. கரடு-முரடான வார்த்தைகளையோ, வசைபாடலையோ பயன்படுத்தவில்லை. கனிவான, அன்பான, அரவணைக்கும் தொணியிலேயே அவர்களது அணுகுமுறை அமைந்திருந்தது.

அவர் குற்றத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியது போன்றே பரிகாரத்தைக் கடைபிடிக்க முடியாத தனது கஷ்ட நிலையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியது போன்றே, தனது தவறையும் வெட்கமில்லாமல் வெளிப்படையாகவே கூறி விடுகின்றார். பரிகாரமாக அமையும் வண்ணம் நபி(ஸல்) அவர்கள் அளித்த பேரீத்தம் பழங்களையும் தனக்குத் தர வேண்டும் என்பதை இந்த வார்த்தைகள் மூலம் உணர்த்துகின்றார். அவர் ஒரு திறந்த புத்தகமாகத் திகழ்கின்றார்.

நபி(ஸல்) அவர்கள், அவரைப் பார்த்து “இதை உன் குடும்பத்திற்கே உண்ணக் கொடு!” என்கின்றார்கள். குற்றம் செய்தார்; அதற்குப் பரிகாரம் காண வந்தார். பரிகாரங்கள் எதையும் செய்ய முடியாத தனது பரிதாப நிலையைப் பகிரங்கமாகக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் கொடுத்த தர்மத்தைக் கூடப் பிறருக்குக் கொடுப்பதை விட, “அதற்குத் தானே தகுதியானவன்!” எனக் கூறினார். இதன் மூலம் குற்றஞ்செய்து விட்டு, தர்மத்தையும் பெற்றுக்கொண்டு வீடு சென்றார்.

இஸ்லாம் கூறும் பொது விதிகளில், கஷ்டம் இலகுவைக் கொண்டு வரும் என்பது ஒன்றாகும். இவரது கஷ்டம் இவருக்கு இலகுவை மட்டுமல்ல! பரிசையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

நபி(ஸல்) அவர்கள் வாய் விட்டுச் சிரித்த மற்றுமொரு சம்பவத்துடன் இன்ஷா அல்லாஹ் உங்களை மீண்டும் சந்திக்க அல்லாஹ் அருள் புரிவானாக!

அல்குர்ஆனும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் உலக மக்களின் இறுதி வழிகாட்டி

இது விரட்டப்பட்ட ஷைத்தான் வார்த்தை அல்ல. நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?

இது அகிலத்தாருக்கும் உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறில்லை (81:25-28)

அல்குர்ஆனைப் பற்றி அல்லாஹ் கூறும் தெளிவுரை இது!

இந்த உலகத்தில் பிறக்கின்ற வாழ்கின்ற எல்லா மக்களும் அல்லாஹ்வின் படைப்புகளே! பல இனத்தவர்களும் பல மொழி பேசும் மக்களும் பிரதேசத்தால் வேறு பட்டு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரை யும் படைத்தவன் அல்லாஹ்தான்.

அல்லாஹ்வின் உயர்ந்த படைப்பாகிய இந்த மனித சமூகத்திற்கு சத்திய வழியை நேரிய பாதையை காட்டுவதற்கு பல நபிமார் களை காலத்திற்கு காலம் அல்லாஹ் அனுப்பி வைத்து வேதங்களையும் இறக்கி வைத்தான்.

”மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற் செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான் (2:213).

எந்தவொரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பி வைத்தோம் (14:4).

இவ்வாறாக வந்த அல்லாஹ்வின் தூதுத் துவம் குறிப்பிட்ட சமூகங்களுக்கு மட்டுமே உரியதாக அமைப் பெற்றிருந்தது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வரு கையோடுதான் இத்தூதுத்துவம் அகிலத் தாருக்குரிய தூதுத்துவமாக நிலைநிறுத்தப் பட்டது.

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் மக்கத்து மக்களுக்குரிய அல்லது அரபு தீபகற்பத்துக்குரிய வேதமாக மட்டும் அருளாமல் முழு மனித சமுதாயத் திற்குரிய வேதமாக அருளினான். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உலக மக்களுக்குரிய இறுதி நபியாக அனுப்பி வைத்ததுடன் அல்குர்ஆனும் உலக பொதுமறையாக இறக்கப்பட்டது.

அல்குர்ஆன் ரமழான் மாதத்தில்தான் அருளப்பட்டது. ரமழானுடைய மகத்து வத்தை கூற வந்த அந்தக் குர்ஆனிய வசனத்தில்தான் உலக மக்களுக்கான நேர் வழி பற்றியும் எடுத்துச் சொல்லப்பட்டது. பொது மறை என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

”ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டி யாகவும் நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் நன்மை தீமையைப் பிரித் தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள அல்குர் ஆன் அருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்….” (2:185).

ரமழான் மாதத்தின் சிறப்பு நோன்பு நோற்பதனால் ஏற்பட்டதல்ல. அல்குர்ஆன் ரமழானில் அருளப்பட்டதால்தான் சிறப்புக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, அம்மாதத்தை அடைபவர் நோன்பு நோற் கட்டும் என குர்ஆன் விளக்கப்படுத்துகிறது.

இவ்வுலகில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் ஒரேயொரு வழியை காட்டக் கூடிய நன்மை தீமையை பிரித்தறிவிக்கக் கூடிய உலக பொதுமறையான அல்குர் ஆன் அருளப்பட்டதாக இந்த ரமழான் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டு முரிய வேதமல்ல என்கிற செய்தி மிகத் தெளிவாகவும் நேரடியாகவும் இத்திருமறை வசனத்தில் கூறப்படுகிறது. ரமழானில் அல்லாஹ்வுக்காக தன்னை அர்ப்பணித்து ஆன்மீகப் பயிற்சிகள் பெற்று பக்குவமுள்ளவர்களாக வளர்த்துக் கொள்ளும் முஸ்லிம்களுக்கு விடுக்கப்படும் இச்செய்தி மிக முக்கியமானதாகும்.

தங்களுக்கு மட்டுமுரிய வேதமாகவும் மார்க்கமாகவும் இந்த குர்ஆனையும் இஸ்லாத்தையும் வைத்துக் கொள்ளாமல் ஏனைய சமூகத்தவர்களுக்குரியதாகவும் எடுத்துக் காட்ட வேண்டிய பொறுப்பையும் இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது.

மேலே நாம் எடுத்துக் காட்டிய 81:25-28 வசனம் இதனை மேலும் தெளிவுபடுத்துகிறது.

உலகத்தார் யாவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறி விக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மத் நபியின்) மீது இறக்கியவன் (அல்லாஹ்) மிக்க பாக்கியமுடையவன். (25:1).

அலிப் லாம் றா, (நபியே! இது) வேத நூல். இதனை நாமே உம்மீது அருளி னோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்களுடைய இறைவனின் கட்டளைப் பிரகாரம் இருள்களிலிருந்து வெளியேற்றி பிரகாசத்திற்கும் புகழுக்குரிய மிகைத்தவ னான அல்லாஹ்வின் பாதையின் பால் நீர் கொண்டு செல்வதற்காகவும் உம்மீது அருளினோம் (14:1).

இது மனித குலத்திற்கு சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவன் இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டது) (14:52).

இந்த வசனங்கள் எல்லாம் அல்லாஹ்வின் வேதம் முழு மனித சமூகத்திற்குமுரியது என்று விளக்கப்படுத்தப்படுகிறது. முஹம்மத் நபியின் மீது இவ்வேதத்தை இறக்கியருளும் போதே அம்மக்களை வழிகேட்டிலிருந்து நேர்வழியின்பால் அழை த்து வருவதற்காகவே அருளப்படுவதாக அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

நபியே! நீர் கூறுவீராக! மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியது. அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவனே உயிர்ப் பிக்கிறான். அவனே மரணம் அடையும் படியும் செய்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய அவன் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள். அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார். அவரையே பின்பற்றுங்கள். நீங்கள் நேர்வழி பெறுவீர்கள் (7:159).

அல்லாஹ்வை கடவுளாக ஏற்று முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்று நேர்வழியின்பால் வாருங்கள் என்று தூதுத்துவத்தை உலக மக்களுக்குப் பிரகடனப்படுத்துமாறு நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு பொதுவாக அழைப்பு விடுத்தார்கள். அன்றைக்கு மக்கா மதீனாவை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கும் ஆட்சி புரிந்த மன்னர்களுக்கும் கடிதம் எழுதி இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தார்கள். மக்கள் கூடுகின்ற இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்தார்கள்.

இப்பணியினை நபிகளாருக்குப் பிறகு ஸஹாபாக்கள் செய்தார்கள். கலீபாக்கள் செய்தார்கள். இஸ்லாமிய தூது பரந்து சென்றது, வளர்ச்சி கண்டது.

இன்று அந்தப் பொறுப்பை நிறைவேற்றுபவர்கள் யார்? ஒரு சிலரை தவிர முஸ்லிம்களில் பெரும்பாலானோர் நிறைவேற்றத் தவறிவிட்டார்கள். துரதிஷ்டவசமாக மாற்று மத நண்பர்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் வீடுகளை நோக்கி வந்து அவர்களுடைய மார்க்கப் பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கக்கூடிய திறமையுள்ளவர்கள் எத்தனை பேர்?

சகோதர சகோதரிகளே! முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பொறுப்பை உணர்ந்து கொள்வோம். புனித ரமழானை இதற்காக பயன்படுத்துவோம். முடிந்தளவு இஸ்லாமிய மார்க்கத்தினை வாழ்க்கையில் கடைப் பிடித்து அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து இஸ்லாத்தை புரியவைப்போம். அல்குர்ஆனையும் இறுதி தாதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும்அறிமுகப்படுத்துவோம். அவர்களுடைய சந்தேகங்களுக்கு பதிலளிக்கக் கூடியதாக மார்க்கத்தை சரிவர கற்றுக் கொள்வோம்.

எத்திவைப்பதுதான் எமது பணி! நேர்வழி காட்டுவது (ஹிதாயத் கொடுப்பது) அல்லாஹ்வின் பணி!

நோன்பின் சட்டங்களை சுறுக்கமாக அறிந்து கொள்ள..

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்று, அதன் படி எமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பிரசுரம் வெளியிடப்படுகிறது. புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும்.
ரமழான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடியதும், தெளிவான சான்றுகளைக் கொண்டதும், (நன்மை தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 2:185)

நோன்பின் நோக்கம்:

நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா.t) கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (r‘யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ, அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபி - நூல்: புகாரி, திர்மிதி.t) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (r‘நோன்பு நோற்றிருக்கும் போது, உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் – அறியாமையாக நடந்து கொண்டால் – ஏசினால் நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபி

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பயன்கள்:

நூல்: புகாரி.t) அவர்கள் கூறுகிறார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (r‘ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால், நோன்பு எனக்கே உரியது. எனவே, அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (), நூல்: புகாரி.t) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (r‘யார் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (


ரமழான் மாதத்தை தீர்மானம் செய்தல்:

‘நீங்கள் பிறை பார்த்து நோன்பைத் துவங்குங்கள்! பிறை பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால், ஷஅபான் மாதத்தின் நாட்களை முப்பது நாட்களாக முடிவு செய்து கொள்ளுங்கள்.’ (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஸஹருக்கு அறிவிப்புச் செய்தல்:

(அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.r) ஆகிய இரண்டு முஅத்தீன்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபி (t), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (t) அவர்களால் செய்யப்பட்டிருந்தது. பிலால் (rமக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால், ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபி - , நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.t) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (r‘பிலாலின் அதான் (பாங்கு) ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில், (இரவில்) நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும் உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அதான் (பாங்கு) சொல்வார் என நபிகள் நாயகம் (
), நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ.t) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (r‘பிலால் இரவில் அதான் (பாங்கு) சொல்வார். இப்னு உம்மி மக்தூம் அதான் (பாங்கு) சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று நபி (

ஸஹர் உணவு:

நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.t) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (r‘நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள்! ஏனெனில், ஸஹர் நேர உணவில் பரகத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபி (
), நூல்: முஸ்லிம்.t) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (r‘நமது நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிறிஸ்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் என நபி (

குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்யலாமா?


நூல்: புகாரி, முஸ்லிம்,t) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹ் நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (r‘ரமழான் மாதத்தில் நபி (

நிய்யத் வைத்தல்:

நிய்யத் என்பது வாயால் மொழிவதன்று, உள்ளத்தால் எண்ணுவதாகும். நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் எண்ணுதல், தீர்மானம் செய்தல் என்பது பொருளாகும். வாயால் மொழிவது என்ற அர்த்தம் இந்த வார்த்தைக்கு இல்லை. பர்ழான நோன்பு நோற்கக்கூடியவர் முதல் நாள் இரவில் காலை நோன்பிருப்பேன் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.’ ‘நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி…’ என்று மக்களால் சொல்லப்படும் நிய்யத்து நபி வழியல்ல. எனவே, நோன்பு நோற்கின்றேன் என மனதால் எண்ணிக்கொள்ள வேண்டும்.

நோன்பின் நேரம்:

சுப்ஹ் நேரம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது, சுப்ஹ் நேரம் துவங்கியது முதல், சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.

உஷ்னத்தைத் தணிக்கலாமா?


அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது, வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.’ (நூல்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ) எனவே, நோன்பாளி சூட்டை தணிப்பதற்காக குளிக்கலாம், தலையில் நீரை ஊற்றிக் கொள்ளலாம்.r‘நபி (

நோன்பில் மறதியாகச் செய்யும் காரியத்திற்கு:

நூல்: புகாரி, முஸ்லிம். எனவே, நோன்பாளி மறதியாக உண்பதால் நோன்பு முறிந்து விடாது. வேண்டுமென்று யாராவது உண்டால், அல்லது பருகினால் நோன்பு முறிந்து விடும்.t) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (r‘ஒரு நோன்பாளி மறதியாக ஏதேனும் சாப்பிட்டுவிட்டால், அல்லது பருகிவிட்டால், அவர் தனது நோன்பை நிறுத்திவிடாமல் பூர்த்தியாக்கட்டும். ஏனெனில், அவருக்கு உணவளித்ததும், அருந்தச் செய்ததும் அல்லாஹ்வேயாகும் என நபி (

பல்துலக்கலாமா?


நூல்: திர்மிதி. எனவே, நோன்புடன் பற்துலக்குவது நோன்பை முறித்துவிடாது.t) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது எண்ணிச் சொல்ல முடியாத தடவை பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன்.’ அறிவிப்பவர்: ஆமிர் (r‘நபி (

உணவை ருசி பார்த்தல்:

உணவு சமைப்பவர்கள் சமைக்கும் போது, உணவுப் பொருட்களை ருசி பார்த்து விட்டு அந்த எச்சிலைத் துப்பிவிட வேண்டும்.


உறக்கத்தில் விந்து வெளியேறினால்:

(நூலt) அவர்களிடம் கேட்டார். அவருக்கு அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டபோது, அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (r‘நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபி (்: அபூதாவூத்.
) அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: அபூதாவூத்) எனவே, நோன்பாளிக்கு உறக்கத்தில் விந்து வெளியேறினால் நோன்பு முறிந்து விடாது. சுயமாக யாராவது வெளியேற்றினால் நோன்பு முறிந்துவிடும்.r‘தூக்கத்தின்போது, (கனவில்) விந்து வெளிப்பட்டால், நோன்பை விட்டுவிட வேண்டாம் என நபி (

சுருமா, வாசனைப் பொருட்கள் பாவிக்கலாமா?


‘சுருமா, பூசிக்கொள்வதால் நோன்பு முறிந்து விடாது.’ (நூல்: புகாரி, திர்மிதி.) (வாசனைப் பொருட்கள், வைத்தியத்திற்காக ஊசி போட்டுக்கொள்ளுதல் போன்றவற்றாலும் நோன்பு முறியாது.)


நோன்பை முறிக்கும் செயல்கள்

உடலுறவு, உண்ணல், பருகல்:

ஒருவர் வேண்டுமென்று உண்பதும், குடிப்பதும், பகல் நேரத்தில் உடலுறவு கொள்வதும் நோன்பை முறிக்கும்.
மூக்குத் துவாரத்தால் நீரை உட்செலுத்தல்:
), நூல்: அபூதாவூத்.t) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: லகீத் பின் ஸபீரா (r‘நோன்பாளி வுழூச் செய்யும் போது, மூக்குக்கு அளவுகடந்து தண்ணீர் செலுத்தலாகாது என நபி (

இரத்தம் குத்தியெடுத்தல்:

(, நூல்: திர்மிதி.t) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜா (r‘இரத்தம் குத்தி எடுத்தவரும், எடுக்கப்பட்டவரும் நோன்பை முறித்து விட்டனர் என நபி (
வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்:
), நூல்: திர்மிதி, அபூதாவூத்.t‘எவருக்கு வாந்தி வந்ததோ, அவர் மீது நோன்பு கழா|இல்லை. யார் வேண்டுமென்று வாந்தி எடுத்தாரோ, அவர் நோன்பைக் கழாச் செய்யட்டும்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூஹுரைரா (
சிற்றின்பத்தின் மூலம் விந்து வெளிப்படல்:
ஒருவர் கட்டியணைத்தல், முத்தமிடல் போன்ற சிற்றின்பத்தில் ஈடுபடுகின்றார். அதன் மூலம் விந்து வெளிப்படும் எனில், அவரது நோன்பு முறிந்து விடுவதோடு, அவர் அதனை பின்னர் கழாச் செய்ய வேண்டும்.

உடலுறவு கொள்ளல்:

‘ஒரு நோன்பாளி (நோன்பு நோற்றது (ஸஹர்) முதல் மஃரிப் வரையுள்ள நேரத்தில்) உடலுறவு கொண்டால், நோன்பைக் கழாச் செய்வதுடன் குற்றப்பரிகாரமும் (பித்யா) செய்ய வேண்டும். நோன்புடனிருக்கும் போது, உறவு கொண்டால், அவருக்கான குற்றப்பரிகாரம் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும்:


• ஓர் அடிமையை விடுதலை செய்தல்.
• தொடராக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றல்.
), நூல்: புகாரி, முஸ்லிம்.t• 60 ஏழைகளுக்கு உணவளித்தல்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (

நோன்பு திறந்தது முதல், ஸஹர் நேரம் வரை உடலுறவு கொள்ள முடியும். அதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.


நோன்பை விடச் சலுகையுடையோர்

மாதவிடாய் பெண்களும், பிள்ளைப் பேற்று தாய்மார்களும்:


(நூல்: புகாரி, முஸ்லிம்.t‘மாதவிடாய்ப் பெண்கள் நோன்பு நோற்பது ஹராம். ஒரு பெண் நோன்போடு இருக்கும் போது, நோன்பின் இறுதி சில நிமிடங்களுக்கு முன்னர் என்றாலும் சரி, மாதவிடாய் அல்லது நிபாஸ்|இரத்தம் வருமெனில், அவளது நோன்பு முறிந்து விடும். அவள் அதனைப் பின்னர் கழாச் செய்யவேண்டும்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (
பிரயாணியும் நோயாளியும்:
‘எவரேனும் நோயாளியாகவோ, பிரயாணியாகவோ இருந்தால், (ரமழானில் பிடிக்காத நோன்புகளை) மற்ற நாட்களை எண்ணி (நோற்று) விடவும்’ (அல்குர்ஆன் 2:184) இவ்வசனம் நோயாளியும், பிரயாணியும் ரமழானில் நோன்பை விட்டு விட்டு, ஏனைய மாதங்களில் பிடிக்க அனுமதியளிக்கிறது.

முதியோர்:


நூல்: இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத், திர்மிதி.t‘ரமழான் காலத்தில் நோன்பை விட்டு விட வயது சென்ற முதியவர்களுக்கும், தீராத நோயாளிகளுக்கும் அனுமதி உண்டு. முதுமை என்பது நீங்கக் கூடியதல்ல. தீராத நோயுடையோரது நிலையும் இதுதான். இப்படியான நிலையில் உள்ளவர்கள் விடும் ஒவ்வொரு நோன்பிற்கும் பரிகாரம் (பித்யா) ஒரு ஏழை வீதம் ஒவ்வொரு நாளும் உணவளிக்க வேண்டும்.’ அறிவிப்பவர்: அனஸ் (
கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும்:

), நூல்: இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத், திர்மிதி.t) அவர்கள் நோன்பில் சலுகை அளித்தார்கள். கர்ப்பத்தில் உள்ள சிசுவும், பால் அருந்தும் குழந்தையும் பாதிக்கப்படலாம் என அஞ்சும் தாய்மார்கள் நோன்பை விட்டு விட்டு, பின்னர் அதை கழாச் செய்யலாம்.’ அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (r‘கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நபி (

ஹைளு, நிபாஸ்வுடைய பெண்கள்:


நூல்: புகாரி.t) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் கழாச் செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள்.’ அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (r) அவர்களுடன் இருந்த காலத்தில், மாதவிடாய் ஏற்பட்டு, தூய்மையடைவோம். அப்போது, விடுபட்டிருந்த நோன்பைக் கழாச் செய்யுமாறு நபி (r‘நாங்கள் நபி (

சிறுவர்கள்:


‘பருவம் அடையாத சிறுவர்கள் மீது நோன்பு கடமையில்லை. எனினும், அவர்களை பயிற்றுவிப்பதற்காக ஸஹாபாக்கள் நோன்பு நோற்கச் செய்துள்ளனர். அத்தோடு, அவர்கள் பசியை உணராமல் இருப்பதற்காக அவர்களுடன் சேர்ந்து விளையாடியும் உள்ளனர்.’ (நூல்: புகாரி) அதனால், அவர்களும் நோன்பு பிடிக்கலாம்.


நோன்பு திறத்தல்:

(நூல்: நஸயீ.t) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (r‘யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ, அவர் அதன் மூலம் நோன்பு திறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு திறக்கட்டும். ஏனெனில், அது தூய்மையானதாகும் என்று நபி (

), நூல்: புகாரி.t) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (r‘நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று, தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும் என்று நபி (


நோன்பு திறப்பதை விரைவு படுத்தல்:

நூல்: அஹ்மத்.t) அவர்களின் பொன்மொழி.’ அறிவிப்பவர்: அபூதர் (r‘நோன்பு திறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம், மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபி (
நோன்பின் துஆ:
நோன்பு திறக்கும் போது, கூறுவதற்கு ஆதாரபூர்வமான துஆக்கள் இல்லாததால், வழமையாக உணவு உண்ணும் போது, ‘பிஸ்மில்லாஹ்’ கூறுவது போன்று கூறிக் கொள்ள வேண்டும். நோன்பு திறந்த பின்னர் கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப்படும் என்பதால், தமிழ் மொழியிலேயே அதிகமதிகம் தமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்திக்கலாம்.

சுன்னத்தான நோன்புகள்

ஆறு நோன்புகள்:
) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.rரமழான் மாதத்திற்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபி (
), நூல்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி.t) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூ அய்யூப் (r‘யார் ரமழான் மாதம் நோன்பு நோற்று, அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறுநாட்கள் நோன்பு நோற்கிறாரோ, அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என்று நபி (


வியாழன் மற்றும் திங்கள் தோறும் நோன்பு நோற்பது:

நூல்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.t) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (r‘நபி (
), நூல்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.t) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (r‘ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்பிக்கப்படுகின்றன. எனவே, நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி (

அரபா நோன்பு:

துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரபாவில் தங்குவார்கள். அன்றைய தினம் ஹாஜிகள் தவிர்ந்த மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.
) அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: முஸ்லிம்)r‘அரபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம், மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என நபி (


நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்:

அவர்கள் தடுத்துள்ளார்கள்.r) அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஷஅபான் முப்பதாம் இரவா? ரமழானின் முதல் இரவா? என்ற சந்தேகம் ஏற்படும் நாளிலும் நோன்பு நோற்பதை நபி (rநோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், அதையடுத்த மூன்று நாட்கள் ஆகிய ஐந்து நாட்கள் நோன்பு நோற்பது நபி (
), நூல்: புகாரி, முஸ்லிம்.t) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.’ அறிவிப்பவர்: அபூஸயீத் (r‘நபி (
) நூல்: அஹ்மத்.t) அவர்கள் கட்டளையிட்டார்கள்.’ அறிவிப்பவர்: ஸஃது (r‘தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் பிறை 11,12,13) உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் எந்த நோன்பும் கிடையாது என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (
), நூல்: புகாரி.t) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.’ அறிவிப்பவர்: அம்மார் (r‘(ரமழானா? ஷவ்வாலா? என்று) சந்தேகம் உள்ள நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி (
பராஅத் நோன்பு என்றும், மிஹ்ராஜ் நோன்பு என்றும் நோற்கக் கூடிய நோன்புகள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத, குர்ஆன் ஹதீஸில் இடம்பெறாத, மக்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட பித்அத் நோன்புகளாகும். இதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.


இரவு வணக்கம் (கியாமுல் லைல்)

அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.rபுனித ரமழானின் இரவு காலங்களில் நின்று வணங்குவதை நபி (
) அவர்கள் 11 ரக்ஆத்துக்களுக்கு மேல் தொழுததில்லை என விடையளித்தார்கள்.’ (நூல்: புகாரி, முஸ்லிம்)r) அவர்களிடம் கேட்டபோது, ரமழானிலும் ரமழான் அல்லாத மாதங்களிலும் நபி (t) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று அபூ ஸலமா அவர்கள் ஆயிஷா (r‘ரமழானில் நபி (
) அவர்கள் கட்டளையிட்டார்கள்.’ (நூல்: முஅத்தா)t) அவர்களையும் மக்களுக்கு 11 ரக்ஆத்துக்கள் தொழ வைக்குமாறு உமர் (t) அவர்களையும் தமீமுத்தாரி (t‘உபைப் பின் கஅப் (
எல்லா நாட்களிலும் கியாமுல் லைல் தொழுகையை தொழவேண்டும். எனினும், ரமழான் மாதத்தில் இந்த தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. ‘யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர் நோக்கியும் தொழுகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இத்தொழுகையை ஜமாஅத்தாகவும் தனியாகவும் தொழலாம். 20 10 3 ரக்ஆத்துக்கள் தொழுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

லைலத்துல் கத்ர் இரவு

ரமழான் மாதத்தில் மகத்துவமிக்க ஓர் இரவு உள்ளது. ‘இந்தத் திருக்குர்ஆனை மகத்துவமிக்க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்.’ (அல்குர்ஆன் 97:1-3)
இந்த மகத்துவமிக்க இரவு 27ல் தான் என்று குர்ஆனிலோ ஹதீஸிலோ கூறப்படவில்லை. கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவு அமைந்துள்ளது.
‘லைலத்துல் கத்ர் இரவை ரமழானில் கடைசி பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்’ என்பது நபிமொழி. (நூல்: புகாரி)

இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!!

உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான்.அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம்.பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும்,மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.

இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்றநியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது :-
உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து
கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது
தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில்
பறக்கும்' என்று விஞஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து
கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனையே இறைவன் 1425 வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் என்றால் என்ன என்று
தெரியாத காலகட்டத்திலேயே திருக்குர்ஆனில் கூறும் பொழுது...

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன்
சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1,2)

பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)

இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)

வானம் பிளந்து விடும்போது (84:1)

வானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள்
(பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது,
(82: 1-4)

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)

இவ்வாறு இறைவன் திருக்குர்ஆனில் உலகின் அழிவைப் பற்றி முன்னறிவிப்புகளைச்
சொல்லியிருக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகின் அழிவைப் பற்றிக் கூறும் பொழுது...

''நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்'' என்று தன்
இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)

உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று 1425
வருடங்களுக்கு முன்னரே இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ்
முன்னறிவிப்பு செய்துவிட்டான். அந்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றாக இந்த
காலகட்டத்தில் அப்படியே பொருந்தி வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

இதோ அம்முன்னிவிப்புகளில் ஒருசில...

'காலம் சுருங்கி விடும்' எந்தளவுக்கென்றால் 'ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும், ஒரு நாள்; ஒரு மணிநேரம் போல் ஆகிவிடும், ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல் ஆகிவிடும்' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுப் பிரதேசம் வளமே இல்லாமல் வெறும் பாலைவனமாக காட்சியளித்தது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது'' (முஸ்லிம் -157)

விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள்.அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்கம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்;தான் அப்போது நல்லவன். புஹாரி 5577, 5580)
(மும்பையில் மட்டும் 12000க்கும் மேற்பட்ட விபச்சார விடுதிகள் உள்ளன)

தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த முதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும். (இப்னுமாஜா)

(இந்த நவீன யுகத்தில் ''எயிட்ஸ்'' என்ற உயிர்க்கொல்லி நோய் வந்துவிட்டதை
பார்க்கிறோம்.)

ஒரு காலம் வரும் ''மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும்.அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்''. (புஹாரி : 5581, 5231)

என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அபூதாவூத்)

அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி)

(இந்த இழிவான நிலையை குக்கிராமங்கள் முதல் வல்லரசு நாடுகள் வரை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.)

ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள்
ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921)

சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி)

காலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள். (திர்மிதி)

எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். (முஸ்லிம்) (ஒரு கோப்பை தேநீருக்கெல்லாம் கொலைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்)
முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி)

பூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)

பூமி அலங்கரிக்கப்படும். (திர்மிதி)

பருவ மழைக்காலம் பொய்க்கும்.

திடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும்.

முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.

பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள். (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)

யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ''இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்''. (நகரங்களின் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் அதனால் அடுக்குமாடி கட்டிடங்கள்அதிகமாவதையும் நாம் காண்கிறோம்.)

வியாபாரமுறைகள் மாறும் (புகாரி)
(இன்டெர்நெட் மற்றும் கடன் அட்டைகள் மூலம் புதிய விதங்களில் வியாபார
முறைகள் மாறியுள்ளதைக் காண்கிறோம்.)

பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும். (முஸ்லிம்)

ஒரு தடைவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.(முஸ்லிம்)

திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள். (பைஹகி)

சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.

ஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும். (புகாரி, முஸ்லிம்)

சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.

பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்.

சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும்.

பொருளாதார வள்ச்சி அதிகமாகும். (புகாரி : 7121,1036,1424)

பொய் மிகைத்து நிற்கும். (திர்மிதி)

உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மேசமாகவே இருக்கும். (புகாரி :7068)

அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். (புகாரி)

முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை
வெறுப்பார்கள்.

பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும். (அபூதாவூத்)

முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் படித்து செயல்பட வேண்டிய நபிமொழி:

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319, 3456)

(சந்தனக்கூடு, கொடிமரம், சமாதி வழிபாடு, அவ்லியாக்களுக்கு நேர்ச்சை,கப்ரை உயர்த்திக் கட்டுதல், தஸ்பீஹ் மணி, மவ்லூது பாடல்கள், இசைக்கச்சேரிகள், உரூஸ் உண்டியல், யானை குதிரை ஊர்வலங்கள்,இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள், வட்டி வாங்குதல், வரதட்சணை பிடுங்குதல், ஜோதிட நம்பிக்கை, திருமணத்தில் பெண்ணுக்கு தாலி கட்டுதல்
மற்றும் வாழைமரம் நடுதல், பிறந்த நாள் விழா எடுப்பது, ஆண்கள் தங்கம் அணிவது இது போன்ற பழக்கவழக்கங்களை மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம்கள் அப்படியே காப்பியடித்து பின்பற்றுவதை நடைமுறையில் கண்டு வருகிறோம்.)

எனவே சகோதர சகோதரிகளே! நாம் செய்ய வேண்டியது என்ன?

மரணவேளை எப்போது நிகழும் என்று எந்த மனிதனும் அறிய முடியாது. அவ்வேளை
நெருங்கி வரும் முன் நாம் நமது அமல்களைப் பெருக்கிக் கொள்வோம்.''இஸ்லாம்'' இறைவனின் மார்க்கம்தான் என்று சந்தேகமற நம்பவேண்டும். இறைவன் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவன் சொன்ன கட்டளைக்கு மாறு செய்யாமல் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். நமது ஈமான் (நம்பிக்கை) அதிகமாக வேண்டும்.

விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளவேண்டும்.

நேர்வட்டி, ஏலச்சீட்டு, பிக்சட் டெபாசிட், எல்.ஐ.சி போன்ற அனைத்து வகை
ஹராமான வட்டிகளைவிட்டும் முற்றிலும் ஒதுங்க வேண்டும்.

மது, சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்ற இறைவன் விரும்பாத அனைத்து
செயல்களைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

ஏமாற்றுதல், அளவு நிலவையில் மோசடி செய்தல், அமானித மோசடி, வாக்கு
மாறுதல், பொய் பேசுதல் போன்ற இழிசெயல்கள் நம்மைவிட்டு ஓடிவிட வேண்டும்.

அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுவது,
பொறாமைப்படுதல், அவதூறு கூறுவது, குடும்ப சண்டைகள் போன்ற நாகரிகமற்ற
செயல்களை விட்டும் நாம் விடுபட வேண்டும்.

இறைவனின் கட்டளைக்கு மாறான, அற்பச் செயலும், சமூகக் கொடுமையும்,அக்கிரமமும், அநியாயமும், அநாகரிகமுமான வரதட்சணை போன்ற பாவங்களிலிருந்து நாமும் விலகி, நம் சமூகத்தையும் விலக்க வேண்டும். இவ்வரதட்சணைக் கொடுமைக்கு துணைபோகிறவர்கள், இக்கொடுமையை இழைப்பவர்கள், இதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்குரியவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அநியாயமும், அக்கிரமுமான இறைவன் மன்னிக்காத, இறைவன் விரும்பாத சமாதி வழிபாடு, பெரியேர்களுக்கு நேர்ச்சை செய்வது, ஜோசியம் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, நல்லநேரம் என நம்புவது,செய்வினைகளை நம்புவது,குத்பியத் மவ்லிது போன்ற இணை வைத்தல்கள் (ஷிர்க்)

என்னும் மகா பாவங்களிலிருந்தும், மூடபழக்கவழக்கங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொண்டு இந்த மாய உலகத்தில், நாம் எதற்காக படைக்கப்பட்டிருக்கின்றோம்? நமது இலட்சியம் என்ன? என்று நம்மை நாமே உணர்ந்து செயல்படுவோமாக!

இன்று இஸ்லாத்தின் எதிரிகளால்; ''இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்ற விஷப் பிரச்சாரம் உலக அளவில் முழுவீச்சில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இக்காலச்சூழ்நிலைiயின் பாயத்தைக் கருத்தில் கொண்டு, திருக்குர்ஆனை அதன் மொழியாக்கத்தோடு நாம் படித்து சிந்தித்து அவைகளை நாம் பின்பற்றி நடப்பது மட்டுமல்லாது மாற்று மத நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, பிற சமூகமக்களுக்கும் திருக்குர்ஆனை படிக்கக் கொடுத்து ''இஸ்லாம்
தீவிரவாதத்தைத் தூண்டும் மார்க்கமல்ல மாறாக சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம்'' என்பதை எடுத்துக் கூறும் முக்கியக் கடமைகளும் நம்மீதுள்ளது என்பதையும் புரிந்து நடப்போமாக!

நமது வாழ்க்கை நெறி திருக்குர்ஆனாக இருக்கட்டும்!

நமது வழிமுறை இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவடாகவே அமையட்டும்!!

இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான்
உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64)

நேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால்
அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.(திருக்குர்ஆன் 21:1

ஹிஜ்ரி 1431 ரமளான் துவக்கம் எப்போது?

ஹிஜ்ரி 1431 ரமளானுடைய முதல் பிறை என்றைய தினம் ? எதனடிப்படையில்?

அல்லாஹ் தன் திருமறையில் 2:189 வசனத்தில் பிறைகளை பற்றி கூறும் போது இது மனித சமுதாயத்திற்கு காலம் காட்டியாக இருப்பதாக கூறுகின்றான். அத்துடன் 10:5 வசனத்தில் சந்திரனுக்கு மாறி மாறி வரும் படித்தரங்களை விதித்திருப்பதே பல வருடங்களின் கணக்கை அறிந்து கொள்வதற்காகத்தான் என கூறுகின்றான். இந்த அடிப்படையில் ஹிஜ்ரி 1431 வருடத்துடைய ரமளான் மாதம் புதன்கிழமை (11.08.2010) துவங்குகிறது.

இதற்கு சான்றாக 1431 ரமளான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃபானுடைய மாதம் 30 நாட்களை கொண்டதாக உள்ளது. அதில் நாம் கண்களால் எண்ணிக்கொள்ளும் 29 படித்தரங்கள் உள்ளது. அதாவது ஷஃபான் மாதம் திங்கள்கிழமை (12.07.2010) துவங்கியது. அன்று முதல் தேதிக்குரிய பிறையை நாம் கண்களால் மேற்கு பகுதியில் பார்க்க முடியும்.

அதே போல் ஷஃபான் மாதத்தின் 29 வது நாள் திங்கள்கிழமை(09.08.2010) ஆகும். அன்றைய தினத்தின் பிறையையும் நாம் கிழக்கு பகுதியில் பஜ்ர் நேரத்தில் கண்களால் பார்க்க முடியும். ஆக மொத்தம் ஷஃபான் மாதத்தின் 29 பிறைகளை நாம் கண்களால் காணும் நிலை உள்ளது. 29 வது நாளுடைய பிறையை நாம் கிழக்கு பகுதியில் பார்க்க முடிவதால் அன்றைய தினம் சந்திரனுடைய சுற்று முடிவடையாமல் இன்னும் ஷஃபான் மாதத்தில் ஒரு நாள் மீதம் உள்ளதை நாம் அறிய முடிகிறது.

எனவே பிறை தெரியாத நாளான செவ்வாய் கிழமையை (10.08.2010) ஷஃபான் மாதத்தின் முப்பதாவது நாளாக எண்ணிக் கொள்ள நமக்கு நபி(ஸல்) அவர்கள் கற்று தந்துள்ளார்கள். வானஇயற்பியல் கணக்கின் படியும் அன்றைய தினம் தான் சூரியன் சந்திரன் மற்றும் பூமி நேர்கோட்டிற்கு வந்து 1431ஷஃபான் மாதத்தின் சுழற்சியை முடித்து, 1431ரமளான் மாதத்திற்கான சுழற்சியை துவங்குகிறது என்பது ஆதாரப்பூர்வமான யாரும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.



நமக்கு நபி(ஸல்) அவர்கள் 29 வது நாளுடைய பிறையை பார்த்து மாதத்தை ஆரம்பிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மாறாக சந்திரனின் அனைத்து படித்தரங்களையும், மன்ஸில்களையும் அறிந்து செயல்படுவது தான் குர்ஆன் ஹதீஸின் உடைய வழி முறையாகும். குழப்பமற்ற அல்லாஹ்வின் தெளிவான தீனுல் இஸ்லாத்தை சிந்திப்பவர்கள் மட்டுமே சரியாக புரிந்து செயல்பட முடியும்.

எனவே உலக மக்கள் அனைவரும் ஹிஜ்ரி 1431 ரமளான் மாதத்தை புதன்கிழமை (11.08.2010) அன்று துவங்கும் படி இந்திய ஹிஜ்ரி கமிட்டி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.