சொர்க்கப் பாதைகள்

1- ஏகத்துவமும் தூதுத்துவமும்அல்லாஹ்வை தன் இரட்சகனாகவும், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் யார் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.
(நபிமொழி, அறிவிப்பவர் :அபூஸயீத் அல்குத்ரீ-ரலி, நூல்: முஸ்லிம்)


2- அல்குர்ஆன்அல்குர்ஆனில் தேர்ச்சி பெற்றவர் தூய்மையான கண்ணியமிக்க மலக்குகளுடன் இருப்பார். அல்குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இரண்டு -மடங்கு- கூலியுண்டு.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூற்கள் : முஸ்லிம்)
கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ)
அல்குர்ஆனில் 30 வசனங்களைக் கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதை ஓதிய மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படும்வரை அது அவருக்காக பரிந்துரை செய்யும். அதுதான் தபாரக் அத்தியாயம்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதி)
குல் ஹுவல்லாஹு அஹத் சூராவை யாரேனும் பத்துத் தடவை முழுமையாக ஓதிமுடித்தால் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : முஆத் -ரலி, நூல் : அஹ்மத்)


3- அஸ்மாவுல் ஹுஸ்னாநிச்சயமாக அல்லாஹ்வுக்கு -நூறில் ஒன்று குறைய- 99 அழகிய பெயர்கள் உள்ளன. யார் அதனை மனனம் செய்துள்ளாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)


4- திக்ருகள்ஸுப்ஹானல்லாஹில் அளீம் வபி ஹம்திஹீ என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகிறது.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : திர்மிதீ)

உங்களில் யாரேனும் ஒருவர் முறையாக உளுச் செய்து, பிறகு 
அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு
என்று கூறுவரானால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காக திறக்கப்படுகின்றன. அதில் அவர் விரும்பி வாயிலில் நுழைந்து கொள்ளலாம்.
(நபிமொழி, அறிவிப்பவர் : உக்பா -ரலி, நூல் : முஸ்லிம்)

"லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" என்பது சொர்க்கத்த�E�் செE0��க்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூ மூஸா -ரலி, நூற்கள் : முஸ்லிம்) 



5- பிரார்த்தனைசொர்க்கத்தை வேண்டி மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால், இறைவா! அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது. நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி வேண்டுமென மூன்று தடவை யாரேனும் -அல்லாஹ்விடம்- பிரார்த்தித்தால், இறைவா! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என நரகம் கூறுகிறது.(நபிமொழி, அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : திர்மிதீ)

6- கல்வியாரேனும் ஒருவர் கல்வியைத் தேடிச் சென்றால் அதன் மூலம் அல்லாஹ் அவருக்கு சொர்க்கப் பாதையை எளிதாக்கிவிடுகின்றான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)


7- வணக்க வழிபாடுகளும் பொதுப்பணிகளும்மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் -எழுந்து- வணங்குங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்!.
(நபிமொழி, அறிவிப்பவர் : அப்துல்லாஹ்-ரலி, நூல் : திர்மிதீ)

8- பள்ளிவாயில் கட்டுதல்காட்டுப் புறாவின் கூட்டைப் போன்றோ அல்லது அதனை விட சிறிய அளவிலோ யாரேனும் அல்லாஹ்வுக்காக பள்ளிவாயில் கட்டிக் கொடுத்தால் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : இப்னுமாஜா)



9- அறப்போர்சொர்க்கம், வாள்களின் நிழல்களுக்கு கீழே உள்ளது.
(நபிமொழி, அறிவிப்பவர் : இப்னு அபீ அவ்ஃபா -ரலி, நூல் : புகாரீ)


10- தர்மம்அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் யாரேனும் ஒரு தர்மம் செய்தால் அதன் மூலம் அவர் சொர்க்கத்தில் நுழைவது உறுதியாகி விட்டது. (நபிமொழி, அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி, நூல் : அஹ்மத்)



11- இரக்க சிந்தனைஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் தன் காலுறையைக் கழற்றி அதில் தண்ணீர் அள்ளி ஊற்றி அதன் தாகத்தைத் தணித்தார். இச்செயலை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அதன் காரணத்தால் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்தான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ)



12- அநாதைகளுக்கு ஆதரவுதன் உறவினருடைய அனாதைக்கோ, அல்லது பிறருடைய அனாதைக்கோ பொறுப்பேற்றவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு -அருகில்- இருப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் தன் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உயர்த்தி சைகை செய்தார்கள்.
(அறிவிப்பவர் :அபூஹுரைரா-ரலி, நூல்: முஸ்லிம்)



13- பெண் பிள்ளைகள்இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் என நபி (ஸல்) அவர்கள் தம் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் -ரலி, நூல் : திர்மிதீ)


14- இறையச்சமும் நற்குணமும்எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக சொர்க்கத்தில் நுழைவார்கள்? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு பயப்படுவதாலும் நற்குணத்தாலும் என்று பதிலளித்தார்கள். எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக நரகத்தில் நுழைவார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நாவின் காரணத்தாலும் இச்சை உறுப்பின் காரணத்தாலும்! என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதீ)



15- கோபம் கொள்ளாமைதன் கோபத்தை வெளிப்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதனை அடக்கிக் கொண்டவரை மறுமை நாளில் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைத்து, அவர் விரும்பிய ஹுருல்ஈனை (சொர்க்கத்து கன்னியரை) தேர்ந்தெடுத்துக் கொள்ள அவருக்கு அனுமதி வழங்குவான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : முஆத் -ரலி, நூல் : அபூதாவூத்)



16- பெற்றோரைப் பேணல்முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் -அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்- சொர்க்கம் செல்லாதவனுடைய மூக்கு மண்ணோடு மண்ணாகட்டும்!
(நபிமொழி, அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)



17- மார்க்கச் சகோதரனை சந்திக்கச் செல்தல்யாரேனும் நோயாளியை விசாரிக்கச் சென்றால் அல்லது அல்லாஹ்வுக்காக மார்க்கச் சகோதரனைச் சந்திக்கச் சென்றால் -மலக்குமார் களில்- அழைப்பவர் அவரை அழைத்து நீ மிகச் சிறந்த காரியம் செய்தாய்! மிகச் சிறந்த செயலுக்காக அடியெடுத்து வைத்துள்ளாய்! மேலும் இதனால் நீ சொர்க்கத்தில் உனக்கென ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொண்டாய்! என்று கூறுவார். (நபிமொழி, அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி. நூல்:திர்மிதீ)


18- குழந்தைகளை இழந்தவர்கள்மூன்று குழந்தைகளை இழந்தும் பொறுமையை கடைபிடித்தவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி எழுந்து, இரண்டு குழந்தைகளை இழந்தவர்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரண்டு குழந்தைகளை இழந்தவரும் தான் என்று கூறினார்கள். நான் ஒரு குழந்தையைப் பற்றிக் கேட்டிருக்கக் கூடாதா? என்று அப்பெண் கூறினார். (நூல் : நஸாயீ)


19- சோதனையில் பொறுமைஆதமின் மகனே! சோதனை ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே பொறுமையைக் கடைபிடித்து, என்னிடத்தில் கூலியையும் எதிர்பார்த்தால் அதன் கூலியாக சொர்க்கத்தை தவிர வேறு எதனைத் தரவும் நான் விரும்ப மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : இப்னுமாஜா)


20- பெருமையும் கடனும் வேண்டாம்பெருமையடித்தல், போரில் கிடைத்த பொருட்களில் மோசடி செய்தல், கடன் வாங்குதல் ஆகிய மூன்றை விட்டும் நீங்கியவனாக மரணித்தவன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டான்.
(நபிமொழி, அறிவிப்பவர் : ஸவ்பான் -ரலி, நூல் : திர்மிதீ)



21- ஈமானுடன் மரணம்யார் நரகத்தை விட்டும் தூரமாகி, சொர்க்கத்தில் நுழைய விரும்புகின்ரோ அவருக்கு அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டிருக்கும் நிலையில் மரணம் வரட்டும். மேலும் தன்னிடம் பிறர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அவர் விரும்புவாரோ அது போன்றே அவர் பிறரிடம் நடந்து கொள்ளட்டும்.
(நபிமொழி, அறிவிப்பவர் : அப்துல்லாஹ் -ரலி, நூல் : முஸ்லிம்)

ஆயத்துல் குர்ஸி

"அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).


அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும்பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாதுஅவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும்பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன்மகத்துவமிக்கவன்.

கடல்கள் இடையே உள்ள திரைகள்

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. (55:19,20)


அரபி மூலத்தில் பர்ஸக் எனும் சொல் இடம் பெறுகின்றது.இதன் பொருள் ஒரு தடுப்பு அல்லது பிரிவினை என்பதாகும். இந்தத் தடுப்பு என்பது ஜடரீதியான (Material) அல்லது ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்ட தடுப்பு அல்ல. ‘மரஜா’ எனும் அரபிச் சொல்லின் அசலான அர்த்தம் அவர்கள் இருவரும் சந்தித்து கலந்து கொண்டனர் என்பதாகும்.
இன்றைய நவீன அறிவியல் இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலை, உப்பின் தன்மை, அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது.
ஆனால், ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சி உறுதி செய்துள்ளார்.
மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றது. 

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)
நதி முகத்துவாரங்களில், அதாவது இரண்டு நதிகள் சந்திக்கும் இடங்களில் உப்பு நீரிலிருந்து சுவைமிகு நீரை தனியாகப் பிரித்து அடையாளம் காட்டும் ஒரு திரை அல்லது மண்டலம் (Pycnocline Zone) உள்ளது. (இம்மண்டலத்தையே திருக்குர்ஆன் திருக்குர்ஆன் ஹிஜ்ரம் மஹ்ஜூரா என்று குறிப்பிடுகின்றது.) இப்பிரிவினை மண்டலம் சுவை நீரிலிருந்தும், உப்பு நீரிலிருந்த்தும் வித்தியாசமான அளவு உப்புத்தன்மை கொண்டுள்ளது.
இந்த இயற்கை நிகழ்வு கடலின் பல்வேறு இடங்களில் ஏற்படுகின்றது. மத்தியத்தரைக்கடலுக்குள் ஓடி மறையும் எகிப்தின் நைல் நதியிலும்
 

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – Sue Watson, முன்னாள் கிறிஸ்தவ மத போதகர் மற்றும் மிசனரி.

உனக்கு என்ன ஆயிற்று? – இது தான் நான் இஸ்லாத்தை தழுவிய பிறகு என்னுடைய முன்னாள் நன்பர்களையோ அல்லது வகுப்பு தோழிகளையோ, அல்லது என்னுடன் பணி செய்த சக பாதிரியார்களையோ சந்திக்கும் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியாகும். நான் அவர்களைக் குறை கூற முடியாது. ஏன் என்றால் நான் கூட மதமாறுவதை விரும்பாதவளாக இருந்தேன். முன்னதாக நான் ஒரு பேராசிரியையாகவும், கிறிஸ்தவ மதத்தைப் போதனை செய்பளாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்புகின்ற மிஷனரியாகவும் இருந்தேன். சுருங்கக் கூறவேண்டுமெனில், மத அடிப்படைவாதி என்று யாரையாவது கூறவேண்டுமானால் என்னைக் கூறலாம்.

நான் அப்போது ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் கத்தோலிக்க மத குருமார்கள் பயிற்சி பெறும் ஒரு உன்னதமான பயிற்சி நிறுவனத்திலிருந்து கடவுளைப் பற்றிய படிப்பிற்கான என்னுடைய முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருந்தேன். அதற்குப் பிறகு தான் சவூதி அரேபியாவில் வேலை செய்து பின்னர் இஸ்லாத்தை தழுவியிருந்த ஒரு பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. எல்லோரையும் போல் நானும் அந்தப் பெண்ணிடம் இஸ்லாத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றிக் கேட்டேன்.

அவர் கூறிய பதிலைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஆமாம் அவர் கூறியது நான் எதிர்பார்த்திருந்தவாறு இல்லை! ஆகையால் நான் தொடர்ந்து இறைவனைப் பற்றியும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் அவரிடம் வினாக்கள் எழுப்பினேன். அதற்கு அந்தப் பெண்மணி, என்னை ஒரு இஸ்லாமிய நிறுவனத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் அங்கிருப்பிருப்பவர்கள் என்னுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான பதிலளிப்பார்கள் என்றும் கூறினார்.

தீய சக்தியிடமிருந்து பாதுகாப்பு வேண்டி இயேசுவிடம் பிரார்த்தித்தவளாக நான் அங்கு சென்றேன். ஏன் என்றால் இஸ்லாம் என்பது தீய சக்தியுடையதும் சாத்தானுடையதுமான மதம் என்று எங்களுக்கு போதிக்கப்பட்டிருந்தது. நாங்களும் அவ்வாறே நம்பியிருந்தோம். நான் அங்கு சென்ற பிறகு அங்கிருப்பவர்களின் ஒளிவு மறைவு இல்லாத நேரடியான அனுகுமுறைகள் கிறிஸ்தவ மதத்தைப் போதித்துக் கொண்டிருந்த என்னை மிகவும் ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. எவ்வித

பயமுறுத்தல்களோ அல்லது வற்புறுத்தல்களோ அல்லது மூளைச் சலவை செய்தலோ அல்லது மனரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துதலோ அங்கு காணப்படவில்லை. நிச்சயமாக அவைகளில் ஒன்றைக் கூட காணமுடியவில்லை!

“நீங்கள் பைபிளைப் படிப்பது போல ‘உங்கள் வீட்டிலேயே குர்ஆனைப் படிக்கலாம்!”

என்னால் நம்பவே முடியவில்லை! அவர்கள் என்னிடம் சில புத்தகங்களைக் கொடுத்து, உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நாங்கள் உங்களுக்கு பதில் தருவதற்கு எங்கள் அலுவலகத்தில் காத்திருக்கிறோம் என்று கூறினார்கள். அன்று இரவே அவர்கள் எனக்கு கொடுத்த அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டேன். அது தான் நான் முதன் முறையாக இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம்களால் எழுதப்பட்ட நூல்களை வாசித்தது ஆகும். இதற்கு முன்னர் இஸ்லாத்தைப் பற்றி கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட (விமர்சன) நூல்களையே படித்திருக்கிறோம். மறுநாள் நான் அவர்களின் அலுவலகத்திற்குச் சென்று மூன்று மணி நேரங்கள் அங்கு அமர்ந்து அமர்ந்து அவர்களிடம் கேள்விகள் பல கேட்டேன். இவ்வாறு நான் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அங்கு சென்று வந்தேன். ஒரு வாரத்தில் நான் பன்னிரண்டு புத்தகங்களைப் படித்து விட்டேன். உலகத்திலுள்ள மக்களிலேயே முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக்குவது மட்டும் ஏன் மிகுந்த சிரமத்திற்குரியதாக இருக்கிறது என்று அப்போது தான் நான் உணர்ந்துக் கொண்டேன். ஏன்? ஏனென்றால் இஸ்லாத்தை விடுவதற்கான காரணம் அங்கு ஏதுமில்லை! இஸ்லாத்தில் இறைவனுடனான நேரடித் தொடர்பு இருக்கிறது. பாவங்களுக்கான மன்னிப்பும், நரக மீட்சியும் பரலோக நிரந்தர வாழ்விற்கான இறைவனின் வாக்குருதியும் இருக்கின்றது.

இயற்கையாகவே என்னுடைய முதல் கேள்வி கடவுளை மையமாக வைத்தே இருந்தது. முஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார்? “இது வேறோரு கடவுள்”, “பொய்யான கடவுள்” என்று கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு போதனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அவன், சர்வ ஞானமும் நிறைந்த, சர்வ சக்தியும் உடைய, தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கின்ற எவ்வித இணை துணைகளே இல்லாத ஒரே ஒரு இறைவன் ஆவான். மேலும் கிறிஸ்துவிற்குப் பிறகு முதல் மூன்று நூற்றாண்டுகள் கிறிஸ்தவ பாதிரியார்கள், இயேசு நாதர் ஒரு இறைத் தூதரும் இறைவனின் தூதுச செய்தியை போதித்த மத போதகரும் ஆவார் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையின் படியே போதித்து வந்தார்கள் என்று அறியும் போது மிகவும் ஆர்வமாக இருந்தது. கான்ஸ்டன்டைன் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பின்னரே திரித்துவம் என்ற மூன்று கடவுள் கோட்பாட்டைக் கிறிஸ்தவ மதத்தில் தோற்றுவித்தார். கிறிஸ்தவத்தைப் பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்து புதிதாக கிறிஸ்தவத்தை தழுவிய இந்த மன்னரே பாபிலோனிய காலத்தில் இருந்த அறியாமைக் கடவுள் கொள்கையை திரித்துவம் என்ற பெயரில் கிறிஸ்தமதத்தில் நுழைத்தார். விரிவுக்கு அஞ்சி இந்த தலைப்பில் அதிகமாக விளக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால் மற்றொரு சமயத்தில் இதைப் பற்றி விளக்குவோம். முக்கியமாக நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். திரித்துவம் என்பது பைபிளின் பல்வேறு மொழிபெயர்ப்புகளில் எந்த ஒன்றிலும் காணப்படவில்லை! மேலும் மூல பாசைகளான ஹீப்ரு மற்றும் கிரேக்க மொழியிலான பைபிளிலும் இந்த திரித்துவம் காணப்படவில்லை.

என்னுடைய மற்றொரு முக்கியமான கேள்வி முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியதாகும். முஹம்மது என்பவர் யார்? கிறிஸ்தவர்கள் இயேசு நாதரை வழிபடுவது போல் முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வழிபடுவது இல்லை என்பதை அறிந்துக் கொண்டேன். இறைவனுக்கும் மக்களுக்கும் இடைப்பட்டவராக அவர் இல்லை! மேலும் அவரை வழிபடுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்றும் நான் அறிந்துக் கொண்டேன். முஸ்லிம்களின் பிரார்த்தனைகளின் (தொழுகைகளின்) இறுதியில் அவருக்கு (முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு) அருள் புரியுமாறு வேண்டுகிறார்கள். ஆனால் ஆபிரஹாமுக்கு இறைவன் அருள் புரிந்ததைப் போன்று தான் வேண்டுகிறார்கள். அவர் ஒரு நபியும் இறைத் தூதரும் ஆவார்கள். மேலும் இறுதி தூதரும் ஆவார்கள். உண்மையில் 1418 ஆண்டுகளுக்குப் பிறகும் இதுவரை எந்த ஒரு இறைத் தூதரும் அவருக்குப் பிறகு வரவில்லை! இயேசு நாதர் மற்றும் மோஸஸ் ஆகியோர் யூதர்களுக்கு மட்டும் கொண்டு வந்த தூதுச் செய்திகளைப் போல் அல்லாமல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இறைவனின் தூதுச் செய்தி மனித குலம் அனைத்திற்குரியதாகும்.

இஸ்ரவேலர்களே! கேளுங்கள்! – இந்த செய்தி இறைவனின் ஒரே செய்தியாகும். ‘இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ (மாற்கு 12:29)

பிரார்த்தனை (வணக்கம்) என்பது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாகையால் முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வதில் மிக மிக ஆர்வமாக இருந்தேன். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஸ்லிம்களின் மற்ற நம்பிக்கைகளைப் பற்றி அறிந்திருந்ததை விட முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதைப் பற்றி மிக மிக அறியாமையில் இருந்தோம். முஸ்லிம்கள் (மக்காவிலுள்ள) கஃபாவுக்கு குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள் என்றும், அது தான் அவர்களுடைய பொய்யான கடவுளின் மையப்பகுதி என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. அதையே நாங்களும் உண்மை என்றும் நம்பி வந்தோம். எனவே நான் முஸ்லிம்களின் பிரார்த்தனை (வணக்க முறை) என்பது இறைவனாலேயே கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்த போது மீண்டும் ஆச்சர்யத்திற்குள்ளானேன். மேலும் பிரார்த்தனையின் வார்த்தைகள் இறைவனைப் போற்றிப் புகழ்வதாகும். இறைவனைப் பிரார்த்திக்கச் செல்வதற்கு முன் தூய்மைப் படுத்திக் கொள்வது (உளு) என்பது இறைவனின் கட்டளையயின் பிரகாரம் ஆகும். அவன் மிகவும் பரிசுத்தமான இறைவனாவான். அவன் நமக்கு கற்றுத் தந்த முறைகளிளல்லாது வேறு எந்த முறையிலும் அவனை அணுக கூடாது என்பதையும் அறிந்துக் கொண்டேன்.

மதங்களைப் பற்றிய எட்டு வருடங்கள் எனது ஆரய்ச்சிக்ப் பிறகு, அந்த வார இறுதியில் இஸ்லாம் என்பது ஒரு ஒண்மையான மார்க்கம் என்று நான் அறிந்துக் கொண்டேன். ஆனால் அந்த சமயத்தில் நான் இஸ்லாத்தை தழுவவில்லை. ஏனென்றால் என்னுடைய மனதளவில் இன்னும் நம்பிக்கை வரவில்லை. நான் தொடர்ந்தார் போல் பைபிளைப் படித்துக்கொண்டும், பிரார்த்தனைகள் செய்துக் கொண்டும் மேலும் இஸ்லாமிய சென்டர்களில் நடைபெறும் பிரச்சாரங்களில் கலந்துக் கொண்டும் இருந்தேன். நான் பேராவலுடன் கடவுளிடம் நேர்வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொண்டிருந்தேன்.உங்களுடைய மதத்தை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல! பாவமீட்சி என்று ஒன்றிருந்தால் நான் என்னுடைய பாவமீட்சியை இழக்கவிரும்பவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தொடர்ந்துப் படிக்கும் போது அதிர்ச்சியாகவும் பேராச்சர்யமாகவும் இருந்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் இவைகள் எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்டிருந்தது.

நான் என்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை படிக்கும் போது இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்ததாக கருதி நான் மதிப்பு அளித்த என்னுடைய பேராசியரின் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தைப் பற்றிய போதனைகள் அனைத்தும் முற்றிலும் தவறானவைகள் என்பதை உணர்ந்தேன். அவரும் இன்னும் அவரைப் போன்ற பல கிறிஸ்தவர்களும் மிகவும் நேர்மையானவர்கள்! ஆனால் நிச்சயமாக அவர்கள் தவறானவற்றில் இருக்கிறார்கள்.

இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் இறைவனிடம் நேர்வழி காட்டுமாறு பிராத்தித்த பொழுது எனக்குள் ஏதோ ஒன்று இறங்கியது போன்று உணர்ந்தேன் அப்பொழுது தரையில் உக்கார்ந்து முதன்முறையாக இறைவனின் பெயரை கொண்டு ‘இறைவா! நீ ஒருவனே! நீயே உண்மையான இறைவன்’ என்று கூறினேன். அப்பொழுது என்மீது ஓர் அமைதி இறங்கியது. நான்கு வருடங்களுக்கு முந்தய அந்த நாளிலிருந்து இதுவரை இஸ்லாத்தை தழுவியதற்காக ஒருபோதும் நான் வருந்தியதில்லை.

இதன் காரணமாக சோதனைகளும் வராமல் இல்லை! நான் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு பைபிள் கல்லுரிகளிலிருந்தும் பணி நீக்கம் செய்யப் பட்டேன்; என்கூட படித்த முன்னால் வகுப்பு மாணவ மாணவிகளின் கேலியும் கிண்டலுக்கும் உள்ளானேன்; மேலும் என்னுடைய நாட்டு அரசாங்கத்தின் சந்தேகத்திற்கும் உள்ளானேன். சைத்தானின் தீய சக்திகளை எதிர்கொள்கின்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருந்திருக்கா விட்டால் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள இயலாது இருந்திருக்கும். நான் முஸ்லிமாக இருப்பதற்கும் முஸ்லிமாக வாழ்வதற்கும் முஸ்லிமாகவே மரணிக்க விருபுவதற்கும் நான் என்னுடைய இறைவனுக்கு மிகவும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன்.

“நீர் கூறும்: ‘மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். ‘அவனுக்கே யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்)” (அல்-குர்ஆன் 6:162-163)

சகோதரி கதீஜா வாட்சன் தற்போது பெண்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை போதித்து இஸ்லாத்தில் அழைக்கும் ஆசிரியையாக சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள ஒரு இஸ்லாமிய அழைப்பு மையத்தில் பணிபுரிகிறார்.

விரும்புகின்றீர்களா?

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?

தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் ஒரு நாளில் நூறு தடவை

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?

யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?

ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?

ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?

அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?

ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. (முஸ்லிம்)

உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?

ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?

நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)

அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?

விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?

யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?

ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله

லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?

யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?

சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?

இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்-குர்ஆனை அறிவோம்

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

நபிமொழி அறிவோம்

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். (ஆதாரம் : புகாரி)

உம்ரா செய்யும் முறை

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல் குர்ஆன் 2 : 196)
அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். (அல் குர்ஆன் 3 : 96, 97)

ஹஜ், உம்ராவின் அவசியத்தையும் சிறப்புகளையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பணம் மற்றும் உடலால் நாம் செய்யும் தியாகம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இப்புனித வழிபாட்டை குர்ஆன் மற்றும் நபி வழி முறைப்படி நிறைவேற்ற வேண்டும்.

எனவே ஹஜ், உம்ராவின் முறைகளை எளிதாகவும் சுருக்கமாகவும் இதில் கூறியுள்ளோம். இதனைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். அல்லாஹ் நம்
அனைத்து வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வானாக!

உம்ரா செய்யும் முறை
• எல்லையிலிருந்து இஹ்ராம் அணிந்து கொள்ளவேண்டும்.
• தவாஃப் செய்ய வேண்டும்.
• ஸயீ செய்ய வேண்டும்.
• மொட்டையடிக்க வேண்டும்.
• பெண்கள் ஆண் துணை அதாவது மஹ்ரம் (மணமுடிக்கவிலக்கப்பட்டவர்கள்) இல்லாமல் ஹஜ், உம்ரா செய்வது தடுக்கப்பட்டுள்ளது

இஹ்ராம் அணியும் முறை:

இஹ்ராம் அணிவதற்கெனஎல்லைகள் உள்ளன. அந்த இடம் வந்தவுடன்குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும்.

விமானத்தில் வருபவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும். ஆண்களுக்கு இஹ்ராமுடைய ஆடை, தைக்கப்படாத இரு வெள்ளை துணிகள் ஆகும். அதில் ஒன்றை வேட்டியைப்போல் உடுத்திக்கொள்வது, மற்றொன்றை மேனியில் போர்த்திக்கொள்வது.

இஹ்ராமின்போது பெண்கள் தாம் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் உடலை சரியாக மறைக்காமலோ, அழகை வெளிக்காட்டும் விதமாகவோ இருக்கக்கூடாது. மேலும் முகத்தையும், முன்னங்கைகளையும் மறைக்கக் கூடாது.

தல்பிய்யா:

எல்லை வந்ததும் உம்ராச் செய்பவர், லப்பைக்க உம்ரதன் என்று நிய்யத் சொல்லி உம்ராவை துவக்கிவிட்டு தல்பிய்யாவை தொடர்ந்து கூறவேண்டும்.

லப்பைக், அல்லாஹீம்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க் லாஷரீக லக்.

பொருள் : உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். அல்லாஹ்! உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். இணை துணையற்ற உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். நிச்சயமாக புகழனைத்தும் உனக்கே உரித்தாகும்! மேலும்அருட்கொடையும், அரசாட்சியும் உன்னுடையதே! உனக்கு எவ்வித இணை துணையில்லை.

தல்பியாவை இஹ்ராம் அணிந்ததிலிருந்து கஃபாவிற்குள் நுழையும் வரை சொல்ல வேண்டும். ஆண்கள் தல்பியாவை சத்தமாகவும், பெண்கள் மெதுவாகவும் கூறவேண்டும். இஹ்ராமின் எல்லைக்கு உட்பகுதியில் இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும்.

இஹ்ராம் அணிந்துள்ளவர்கள் செய்யக்கூடாதவைகள் :

• திருமண ஒப்பந்தம் மற்றும் அது சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபடுவது.
• மனைவியுடன் கூடுவது. (உடலுறவு கொள்வது).
• வேட்டையாடுவது.
• உடலுக்கோ, ஆடைக்கோ நறுமணம் பூசுவது.
• தலையில் படக்கூடிய தொப்பி, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு தலையை மறைப்பது.
• முடி, நகம் வெட்டுவது.
• கெட்டவார்த்தைகள், வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.
• தைக்கப்பட்ட ஆடை மற்றும் காலுறை அணிவது.

கஃபத்துல்லாவை அடைந்தவுடன்...

பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் அல்லாஹீம்மஃப்தஹ் லீ அபுவாப ரஹ்மதிக

என்று கூறிய பின்பு தவாஃப் செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பிக்கும் முன் தோளில் உள்ள துண்டை வலப்புற அக்குளின் கீழாக விட்டு இடப்புற தோள் மேலாக விட வேண்டும். வலதுபுற தோள் புஜம் திறந்தும், இடப்புற தோள் புஜம் மூடியும் இருக்க வேண்டும்.

தவாஃப் செய்யும் முறை:

கஃபாவை ஏழு முறை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். கஃபாவில் ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்லிலிருந்தோ அல்லது அதற்கு நேராக நின்றோ சுற்ற ஆரம்பித்து மீண்டும் அதனை வந்தடைவது ஒரு சுற்றாகும்.

பிஸ்மில்லாஹி அல்லாஹீ அக்பர் என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் (வாய்ப்பு இருந்தால்) ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிடவேண்டும். முடியவில்லையெனில் அதனை நோக்கி வலது கையை உயர்த்தி அல்லாஹீ அக்பர் என்று கூறவேண்டும். ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடாவிட்டால் தவாஃபில் எந்தக் குறையும் ஏற்படாது. எனவே ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதற்காக போட்டிபோட்டு பிறருக்குத் துன்பம் தரலாகாது.

முதல் மூன்று சுற்றுக்களில் நடையை நெருக்கமாக வைத்து தோள்களை உலுக்கி (விரைவான நடை போன்று) செல்லவேண்டும். (முதல் மூன்று சுற்றுகள் முடிந்ததும் விரும்பினால் தோள்களை மறைத்துக் கொள்ளலாம்) ஏனைய நான்கு சுற்றுக்களை சாதாரணமாக நடந்து செல்லவேண்டும்.

தவாஃபின் போது நமக்கு தெரிந்த திக்ர், துஆ மற்றும் நம் தேவைகளை கேட்டு வரலாம். குர்ஆனை ஓதிக்கொண்டும் வரலாம். ஆனால் ருக்னுல் யமானி மற்றும் ஹஜ்ரத் அஸ்வத் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில்...

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரத்தி வஹஸனதன் வகினா அதாபன்னார்

பொருள் : 'எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்ற துஆவை மட்டும் ஓத வேண்டும்.

இவ்வாறாக ஏழு சுற்றுக்களை முடித்துக்கொண்டு எட்டாவது முறையும் ஹஜ்ரத் அஸ்வத்தை முத்தமிட முடிந்தால் முத்தமிட்டுவிட்டு, முடியாவிட்டால் வத்தஃகிதூ மிம்மகாமி இப்றாஹீம முஸல்லாஹ் என்று ஓதியவாறு மகாமே இப்ராஹீமிற்கு நேர் பின்னே நின்று தொழ வேண்டும். அதாவது நமக்கும் கஃபத்துல்லாவிற்கும் இடையில் மகாமே இப்ராஹீம் இருக்குமாறு தொழ வேண்டும். இந்த முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல் யாஅய்யுஹல் காபிரூன் - அத்தியாயம் 109 ஐயும், இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல்ஹீவல்லாஹீஅஹது (இஃக்லாஸ்) அத்தியாயம் 112 ஐயும் ஓத வேண்டும்.

ஸூரத்துல் காபிரூன் :

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴿١﴾ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٣﴾ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٥﴾ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ﴿٦﴾

ஸூரத்துல் இஃக்லாஸ் :

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾

இவ்வாறாக தொழுகையை முடித்துக்கொண்டு ஸம் ஸம் தண்ணீரை அருந்த வேண்டும். இதன் பின்னர் ஸயீ (தொங்கோட்டம்) செய்வதற்காக ஸஃபா வாயில் வழியாக உள்ளே பிரவேசிக்க வேண்டும்.

ஸஃபா வாயில் வழியாக பிரவேசிக்கும் போது...

இன்னஸ்ஸஃபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்

பொருள் : ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். என்ற மறைவசனத்தை

ஓதிவிட்டு ஸஃபாவின் மீது கொஞ்சம் உயர்ந்து கிப்லாவை முன்நோக்கி அல்லாஹ்வை ஒருமைபடுத்தி

அல்லாஹீ அக்பர் - அல்லாஹீ அக்பர் - அல்லாஹீ அக்பர்

லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹீ லாஷரிகலஹீ லஹீல் முல்கு வலஹீல் ஹம்து வஹீவ அலா குல்லி ஷையின் கதீர், லாயிலாஹ இல்லல்லாஹீ வஹ்தஹீ, அன்ஜ(ண)ஸ வஃதஹ், வனஸர அப்தஹ், வஹஜமல் அஹ்(ண)ஸாப வஹ்தஹ் என்ற திக்ரை ஓத வேண்டும்.

பின்பு இரு கைகளையும் உயர்த்தி இயன்ற அளவு பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு மும்முறை செய்ய வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேலே பச்சை நிற விளக்குகளை அடைகின்ற போது ஆண்கள் விரைந்து செல்ல வேண்டும். யாருக்கும் சிரமத்தை ஏற்படுத்த கூடாது. அடுத்த பச்சை நிற விளக்குகளை அடைந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். மர்வாவை அடைந்தவுடன் சற்று உயர்ந்து நின்று கஃபாவை முன்னோக்கி இரு கைகளையும் ஏந்தி லாயிலாஹ... என்ற முன்னர் ஓதிய துஆவை மும்முறை ஓதிவிட்டு ஸஃபாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைந்து செல்ல வேண்டும். அடுத்த பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். இவ்வாறாக ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடிவது ஒரு சுற்று, மர்வாவில் ஆரம்பித்து ஸஃபாவில் முடிவது

இரண்டாவது சுற்று, இவ்வாறாக ஏழாவது சுற்று மர்வாவில் முடிவடையும். ஸஃபா, மர்வா அனைத்து சுற்றுக்களிலும் நமக்கு விருப்பமான துஆக்களை கேட்கவேண்டும். திருமறை வசனங்களையும் ஓதலாம்.

ஸயீயை முடித்துக் கொண்ட பின் ஆண்கள் மொட்டையிட்டுக் கொண்டும், பெண்கள் தங்கள் தலைமுடியிலிருந்து ஒரு அங்குலம் அளவிற்கு குறைத்து கொண்டும் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.

(இஹ்ராமிலிருந்து விடுபட) மொட்டையிட்டுக் கொண்டவருக்கு மும்முறை பரக்கத் வேண்டி நபி (ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள். மொட்டையிடாமல் முடியை குறைத்து கொண்டவருக்கு ஒரு முறை மட்டுமே துஆ செய்துள்ளார்கள். எனவே ஆண்கள் மொட்டையிட்டு இஹ்ராமிலிருந்து விடுபடுவதே சிறந்ததாகும்.

இத்துடன் உங்கள் உம்ரா இனிதே நிறைவு பெறுகிறது (இன்ஷா அல்லாஹ்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

இஸ்லாத்தில் சிறந்தது
இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (ஸலாம்) கூறுதல் ஆகும்.
இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து ஸலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் ஸலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி),
ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி 6236

''இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அங்கே இருந்த வானவர் (மலக்கு)களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறும்படியும், அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்று செவியேற்கும்படியும், அதுதான் உமக்கும் உமது வழித்தோன்றல்களுக்கும், முகமன் (கூறும் முறை) என்றும் சொன்னான். அப்போது ஆதம்(அலை) அவர்கள், அவ்வாறே 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூற, வானவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்று கூறி ரஹ்மதுல்லாஹி என்பதை அதிகப்படுத்திச் சொன்னார்கள் என்று நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்"
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
(நூல்: புகாரி, முஸ்லிம்)

அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுதல் 
 
அல்லாஹ் கூறுகிறான் :
"உங்களுக்கு வாழ்த்துக் கூறப் பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்"
-  (அல்குர்ஆன் 4 : 86)
இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் ஸலாம் கூறுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும் சகோதரத்துவமும் அதிகரிக்கும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிம்
முக்கு செய்ய வேண்டிய கடமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு
முஸ்லிம் மற்றொரு முஸ்லிம்­முக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து ஆகும். அவை ஸலாமுக்குப் பதிலுரைப்பது. நோயாளியை நலம் விசாரிப்பது. ஜனாஷாவை பின் தொடர்வது. விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. துமமுபவருக்கு பதிலுரைப்பது ஆகியவை ஆகும்.

அறிவிப்பவர் : அபூ
ஹுரைரா(ரலி)
நூல் : புகாரி (1240)

முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு: -
”நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ”அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார்.  நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ”(இவருக்கு) இருபது (நன்மைகள்)” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்‎” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் ”(இவருக்கு) முப்பது (நன்மைகள்)” என்று கூறினார்கள்.”
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹசைன் (ரலி)
நூல் : அபூ தாவூத் (4521)

ஸலாம்’ எனும் முகமனைப் பரப்ப வேண்டும்: -
நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி)
ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, 5175

’நீங்கள் இறை விசுவாசம் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் வரை, நீங்கள் இறை விசுவாசிகளாக  ஆக முடியாது. நீங்கள் எதைச் செய்தால் அன்பு செலுத்திக் கொள்வீர்களோ,அதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதை பரப்புங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : முஸ்லிம், ரியாளுஸ்ஸாலிஹீன்  848

 ’மனிதர்களே! ஸலாம் கூறுவதை பரப்புங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். ’ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுஙகள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர் : அப்துல்லா இப்னு ஸலாம்(ரலி)
ஆதாரம் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 849

வீடுகளில் நுழையும் முன் ஸலாம் கூறுவதன் அவசியம்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
"நீங்கள் உங்கள் இல்லங்களில் நுழையும் போது, அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்ட அருள் மிகு நல்வாழ்த்தை(அமைதியை) கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் தமது வசனங்களை நீங்கள் விளங்கி கொள்வதற்காக உங்களுக்கு தெளிவாக்கியுள்ளான்.                                                                                       - (அல்குர்ஆன் 24 : 61)

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).                     - (அல்குர்ஆன் 24 : 27)

 ”மகனே! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும் அபிவிருத்தியாக இருக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் :  அனஸ் (ரலி)
நூல் :  திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 861

”நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.”
அறிவிப்பவர் :
அனஸ் (ரலி­) நூல் : புகாரி (6244)

ஸலாம் கூறுவதில் முந்திக் கொள்பவரே சிறந்தவராவார்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர் அவர்களில் முத­ல் ஸலாம் கூறுபவரே ஆவார்”
அறிவிப்பவர் : அபூ உமாமா (
ரலி­)
நூல் : அபூதாவூத் (4522)
 
 ”இறைத்தூதர் அவர்களே! இரண்டு மனிதர்கள் சந்தித்தால் அவ்விருவரில் எவர் ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பது? என்று கேட்கப்பட்டது. ”அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக நல்ல தகுதியானவரே (ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பார்)” என நபி(ஸல்) பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) நூல் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்  858

''இரண்டு பேர் சந்தித்து இவர் அவரைப் புறக்கணித்து; அவர் இவரைப் புறக்கணித்து (இப்படி) ஒரு முஸ்லிம் தன் சகோதரரான இன்னொரு முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது கூடாது. (இந்நிலையில்) அவ்விருவரில் எவர் முதலில் 'ஸலாம்" (சொல்லிப் பேச்சை) ஆரம்பிக்கிறாரோ, அவரே சிறந்தவர் என்று நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஅய்யூ அல் அன்ஸாரி (ரலி­)
நூல் : புகாரி, முஸ்லிம், அபூ தாவூத்

 ''இறைநம்பிக்கையாளர் ஒருவர் மற்றோர் இறைநம்பிக்கையாளரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து (பேசாமல்) இருப்பது ஆகுமானதல்ல. மூன்று நாட்கள் இப்படிக் கழிந்துவிட்டால் (ஒருவர் மற்றொருவரைச்) சந்தித்து 'ஸலாம்" கூறட்டும். (மற்றொருவர்) பதில் 'ஸலாம்" கூறிவிட்டால், இருவருமே சன்மானத்தில் கூட்டாகி விடுகின்றனர். பதில் 'ஸலாம்" கூறாவிட்டால் (பதில் கூறாதவர்) பாவத்திற்கே திரும்பிவிடுகிறார். ஆரம்பமாக 'ஸலாம்" கூறியவர் (இறைவனுடைய) வெறுப்பை விட்டும் நீங்கி விடுகிறார் என்று நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்"
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : அபூ தாவூத்

சந்திக்கும் போது முஸாஃபஹா செய்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”இரண்டு முஸ்­ம்கள் சந்தித்து முஸாஃபஹா செய்தால் அவர்கள் இருவரும் பிரிவதற்கு முன்னால் அவர்களுடைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.
அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (
ரலி
­)
நூல் : திர்மிதி (2651)

சகோதரனைச் சிரித்த முகத்துடன் சந்தித்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” உன்னுடைய சகோதரனைச் சிரித்த முகத்தோடு சந்திப்பது உட்பட நற்காரியங்களில் எதனையும் இழிவாகக் கருதிவிடாதே”
அறிவிப்பவர் : அபூதர் (
ரலி
)
நூல் : முஸ்லி­ம் (4760)

ஸலாம் கூறுவதின் முறைகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும் , சிறுகுழுவினர் பெருங்குழுவினருக்கும் (முத­ல்) ஸலாம் சொல்லட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­) 
நூல் : புகாரி (6231)


சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்

அனஸ் (
ரலி
­) அவர்கள் சிறுவர்களைக் கடந்து செல்லும் போது அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் கூறினார்கள்
நூல் : புகாரி ( 6247 )

அலைக்கஸ் ஸலாம் என்று கூறுவது கூடாது

” நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”அலைக்கஸ் ஸலாம் யாரசூலல்லாஹ்” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ” அலைக்கஸ் ஸலாம் ” என்று கூறாதே. ஏனென்றால் ” அலைக்கஸ் ஸலாம் ” என்பது இறந்தவர்களின் ஸலாம் ஆகும் ” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸ‎ýலைம் (ரலி­)
நூல் : திர்மதி (2646)

யூதர்களைப் போல் ஸலாம் கூறுதல் கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போல் நீங்கள் ஸலாம் கூறாதீர்கள். அவர்களுடைய ஸலாம் கூறுதலாகிறது (வார்தைகள் இல்லாமல்) முன்கைகள் மூலமும், தலை (தாழ்த்துவதின்) மூலமும். சைக்கினையின் மூலமும் ஆகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (
ரலி
­)
நூல் : அஸ் ஸ‎ýனனுல் குப்ரா பாகம் : 6 பக்கம் : 92

தூரத்தில் உள்ளவர்களுக்கு கைகளால் சைக்கினை செய்து மெதுவாக ஸலாம் கூறுதல்

பெண்களில் சிறுகூட்டத்தினர் பள்ளிவாச­ல் அமர்ந்திருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களுக்கு ஸலாம் கூறி தன்னுடைய கைகளை அசைத்தார்கள்.
அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி­) 
நூல் : திர்மிதி (2621)

ஒவ்வொரு சந்திப்பிற்கும் ஸலாம் கூறுதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, அல்லது சுவரோ அல்லது கல்லோ குறுக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தாலும் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.
அறிவிப்பவர் :
அபூஹுரைரா (ரலி­) 
நூல் : அபூ தாவூத் (4523)

மேற்கண்ட ஹதீஸ்கள் மற்றும் குர்ஆன் வசனத்தி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
1.    இஸ்லாத்தில் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று அறிந்தவருக்கும் , அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதாகும்.
2.    ஒரு முஸ்­ம் மற்றொரு முஸ்­முக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றும் ஸலாம் கூறுதலாகும்.
3.    ஒரு சகோதரரை சிரித்த முகத்துடன் சந்திப்பதும். நற்காரியங்களில் உள்ளதாகும்.
4.    முஸாஃபஹா என்பது ஒருவரைச் சந்திக்கும்போது அவருடைய வலது கரம் பற்றுவதாகும். ஒரு கையினால் மட்டுமே முஸாஃபஹா செய்ய வேண்டும். இரு கரம் பற்றிக் குலுக்குவது நபி வழிக்கு மாற்றமானதாகும்.
5.    இருவர் சந்திக்கும் போது முத­ல் ஸலாம் கூறுபவரே இறைவனிடத்தில் நெருக்கத்திற்குரியவராவார்.
6.    நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு ஸலாம் கூறுவதினால் கிடைக்கும் நன்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
7.    சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும் சிறிய கூட்டம் பெரிய கூட்டத்திற்கும் ஸலாம் கூறவேண்டும். ஒரு கூட்டத்தாரின் சார்பாக ஒருவர் மட்டுமே ஸலாம் கூறினால் போதுமானதாகும். ஒரு கூட்டத்தாருக்கு ஸலாம் கூறப்படும் போது அவர்களின் சார்பாக ஒருவர் மட்டும் பதில் ஸலாம் கூறினால் போதுமானதாகும். பெரியவரும் சிறியவருக்கு ஸலாம் கூறலாம்.
8.    ஒவ்வொரு சந்திப்பிற்கும் ஸலாம் கூறுவது சிறப்பிற்குரியதாகும்.
9.    ”அஸ்ஸலாமு அலைக்க” என்று கூறுவது கூடாது., இது இறந்தவர்களுக்குரியதாகும்.
10.    வார்த்தைகள் இல்லாமல் ஒருவரைச் சந்திக்கும் போது முன்கைகளாலும் தலையைத் தாழ்த்தியும் சைக்கினையின் மூலமும் ஸலாம் கூறக்கூடாது. இது யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடைய கலாச்சாரம் ஆகும்.
11.    தூரத்தில் உள்ளவர்களுக்கு ”அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று வார்த்தைகளைக் கூறி கைகளை அசைத்து ஸலாம் கூறலாம்.
12.    ஒருவருக்கு ஸலாம் கூறும் பொழுது அவருக்கு மற்றொரு முறை ஸலாம் கூறலாம். இவ்வாறு மூன்று முறை கூறிக்கொள்ளலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.
ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.
எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கையின் பொருள் பற்றி சமீபத்தில் நான் படித்த ஒரு கதை இங்கே.

ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில

ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது,
கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும்
வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர்.

அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன்

வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர்
வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது.

அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது.

சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்பைகள் அழகானவை, சில கோப்பைகள் விலை
உயர்ந்தவை, வேறு சிலவோ பிரத்யேகமாக கலை அழகோடு வடிவமைக்கப் பட்டவை.

அந்த மாணவர்கள், அழகற்ற கோப்பைகளை தவிர்த்து விட்டு அழகிய கோப்பைகளிலேயே

தேநீர் அருந்த விரும்புகின்றனர். கலை வடிவம் மிக்க தேநீர் கோப்பைக்காக
அவர்களிடையே சிறிய போட்டி கூட நடக்கிறது.

ஒருவழியாக, தமக்கான கோப்பையை தேர்வு செய்து, மாணவர்கள் அனைவரும் தேநீர்

அருந்தும் போது அங்கு வந்த பேராசிரியர் சிறிய விளக்க உரை
நிகழ்த்துகிறார். அது இங்கே.

"ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். நீங்கள் அனைவரும் அழகில் சிறந்த, விலை

உயர்ந்த கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்பினீர்கள். ஒவ்வொரு தனி
மனிதனும் தனக்கென சிறந்ததையே தேர்ந்தெடுக்க விரும்புகிறான். இது மிகவும்
இயல்பான விஷயம்தான் என்றாலும் பல பிரச்சினைகளின் மூல காரணம் அதில்தான்
உள்ளது.

நீங்கள் கஷ்டப் பட்டு போராடி தேர்வு செய்த கோப்பைகள், தேநீருக்கு எந்த

ஒரு தனிச் சுவையையும் கூட்ட வில்லை. சொல்லப் போனால், கலைநயம் மிக்க சில
கோப்பைகள், எளிதில் தேநீர் அருந்த, அதன் சுவையை முழுமையாக உணர தடையாகவே
இருந்தன.

உண்மையில், என் வீட்டிற்கு நீங்கள் வந்தது சுவையான தேநீரை அருந்தவே. கலை

நயம் மிகுந்த கோப்பைகளை உபயோகிக்க அல்ல.

ஆனாலும், தேநீர் அருந்த வந்த உங்கள் கவனம், கோப்பைகளைப் பார்த்தவுடன்

திசை மாறி விட்டது. அதிலும், உங்கள் கையில் உள்ள கோப்பை மீது இருந்த
கவனத்தை விட அடுத்தவர் கையில் என்ன கோப்பை உள்ளது என்பதில்தான் அதிக
கவனம் இருந்தது.

நண்பர்களே! இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று

நினைக்கிறேன். வாழ்க்கை என்பது கூட சுவையான தேநீர் போன்றது. இடையில்
வந்து போகும் பதவி, பணம், புகழ் எல்லாமே, அந்த வாழ்க்கையை தாங்கிப்
பிடிக்க உதவும் கோப்பைகள் மட்டுமே.

மேற்சொன்ன பணம் பதவி போன்ற விஷயங்கள் எதுவும் வாழ்க்கை எனும் தேநீரின்

சுவையை மாற்றுவதில்லை. ஆனால் பல சமயங்களில், கோப்பைகளில் அதிக கவனம்
செலுத்தும் நாம் வாழ்க்கையை முழுமையாக சுவைக்க மறந்து விடுகிறோம். பலர்
இது போல காலப் போக்கில் வாழ்க்கை எனும் தேநீரின் உண்மையான சுவை மறந்து
போய் இயந்திரகதியாக வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்! மகிழ்ச்சியாக வாழும்

மனிதர்களுக்கு எல்லாவற்றிலும் உயர்ந்த விஷயங்கள் கிடைப்பதில்லை. அவர்கள்
தங்களுக்கு கிடைத்த தேநீரை முழுமையாக சுவைப்பதிலேயே அதிக கவனம்
செலுத்துகிறார்கள். அதை தாங்கிப் பிடிக்கும் கோப்பைகளில் அல்ல.

அதிகமான பொருட்கள் வைத்திருப்பவன் உண்மையான பணக்காரன் இல்லை. குறைவாக

தேவைகள் உள்ளவனே பெரிய பணக்காரன். "

இவ்வாறு அவர் உரைத்ததும், அந்த மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றி கொஞ்சம்

விளங்கியது போல இருந்தது. இந்த முறை தேநீரின் சுவையை முழுமையாக ருசித்து
பின்னர் கலைந்து போனார்கள்.

உண்மை நிலை


இவர்கள் யார் என்று தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர்கள் இப்போது எங்கே? டாக்டர் .அப்துல்லா (பெரியார்தாசன்) கூறுகிறார்:

"பாபரி மஸ்ஜிதை இடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் , இடிக்கபட்ட அன்று பள்ளியின் மேலே உச்சியில் (குப்பாவில்) நின்று அதை ஆவேசத்துடன் இடித்த இரு இளைஞர்கள் தங்கள் இடித்த பள்ளியின் இடிபாடுகளின் கல்லை தங்களின் சொந்த ஊருக்கு எடுத்து
சென்றுள்ளார்கள்.

பாணிப்பூர் என்ற ஊரை சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களும் அந்த இடிபாடுகளை ஒரு பள்ளிவாசல் முன்பு கொட்டி அதில் சிறுநீர் கழித்து அங்குள்ள இஸ்லாமியர்களை மனம் புண்பட செய்துள்ளனர்.

அல்லாஹ்வின் இறை இல்லத்தை இடித்த இவர்கள் இரண்டு பேரின் நிலை அடுத்த மூன்று நாட்களில் தலைகீழாக போனது... இருவருக்கும் உச்சகட்ட பைத்தியம் பிடித்தது , பைத்தியம் என்றால் கடுமையானது தன்னை தானே நிர்வாணம் ஆக்கி கொள்வது , கண்ணில் படும் பெண்களின் ஆடைகளை கிழித்து உறவு கொள்ள முயற்சி செய்யும் அளவிற்கு கொடுமையாக இருந்தது., தனது தாயுடனே உறவு கொள்ள முயற்சி
செய்யும் கொடிய நிலைக்கு இவர்கள் ஆளாகி போனார்கள் (அல்லாஹு அக்பர் ).

இந்த இருவரின் குடும்பம்மும் நல்ல வசதி வாய்ப்பை உடையது. இந்த நோய்க்கு மருத்துவம் செய்ய பல இடங்களின் முயன்று அனைவரும் கைவிட அந்த இருவரின் பெற்றோரும் அமெரிக்காவில் உள்ள எனது மனதத்துவ ஆசிரியரை தொடர்பு கொண்டு மருத்துவம் செய்ய அழைக்க அவர் தற்போது தன்னால் வரமுடியாது என்று சொல்லி எனது மாணவர் இந்தியாவில் இருக்கிறார் அவரை அழைத்து பாருங்கள் என்று சொல்லிரிக்கிறார்.

அவர்கள் என்னை அழைக்க நான் அங்கு சென்று பார்த்தேன்.., (சுபஹானல்லாஹ்) இந்த நோயின் தன்மையானது சுமார் ஆறுமாத காலம் எடுத்துதான் இந்த நிலையை அடைய முடியும் . இது தான் அறிவியலின் நிலை ஆனால் இந்த இருவருக்கும் வந்திருப்பது ஆச்சரியமானது , மூன்று நாட்களில் இவர்களுக்கு இந்த நோய் உச்சத்தை அடைந்து விட்டது. இதற்க்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிட்டேன்.

அவர்கள் என்னிடம் பாபரி மஸ்ஜிதை இடித்த பிறகுதான் இப்படி ஆகியது என்று சொன்னார்கள் ஆதலால் வேறு வழி இல்லை என்பதால் நீங்கள் பள்ளியில் இருக்கும் இமாம்களிடம் ஓதி பாருங்கள் என்று சொல்லி விட்டு நான் வந்து விட்டேன்.

நான் அப்போது இஸ்லாமியனாக இருந்தவனில்லை எனினும் சும்மா சொல்லிட்டு வந்தேன்

ஆனால் நான் சொன்னதை மனதில் வைத்து டெல்லியில் பெரிய பள்ளியில் இமாமை சந்தித்து நடந்ததை அழுது புலம்பி சொல்லி இருகிறார்கள் இவர்களின் பெற்றோர்கள்.

இவர்கள் செய்த காரியத்திற்கு அல்லாஹ்வே தண்டனை வழங்கி உள்ளான் நீங்களே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் , நானும் இவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் ஆனால் இவர்களுக்கு குணமானால் என்ன செய்வீர்கள் என்று அந்த இமாம் கேட்க,என்ன வேண்டாலும் செய்வோம் என்று சொல்லி இருகிறார்கள் அவர்களின் பெற்றோர்கள்..,

இமாம் அவர்கள் இருவரையும் இஸ்லாத்தில் இணைத்து விடுங்கள் என்று சொல்லி இருகிறார் அதை ஏற்றுக்கொண்டு பள்ளி வாசலில் அழுது புலம்பி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கூறி உள்ளனர் அனைவரும்... அல்லாஹு அக்பர் - அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அவர்கள் பள்ளிவாசலை விட்டு வெளிஏறி வந்த உடனே
( சுபஹானல்லாஹ் - அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் )

தங்களின் நிர்வாண கோலத்தை மறைக்க தனது தந்தையின் தலை பேட்டாவை எடுத்து மறைதார்களாம் அந்த இருவரும்.-அல்ஹம்துலில்லாஹ்.

நான் இதை அந்த இமாம் இடத்திலையே நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டேன்.

தற்போது இருவரும் இஸ்லாத்தில் இணைந்து எந்த கையால் பள்ளி வாசலை இடித்தார்களோ அதே கையால் பல பள்ளிவாசலை கட்டி வருகிறார்கள் , இங்கு கூட சேலத்தில் ஒரு பள்ளி வாசல் கட்டி வருகிறார்கள். நான் இஸ்லாத்திற்கு வந்த செய்தி அறிந்து என்னை இருவரும் நேரடியாக சந்திக்க வந்தனர் என்று கூறி முடித்தார் dr .அப்துல்லாஹ் அவர்கள்.

லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

சிறப்புகள்:
'இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்'. (அல்குர்ஆன் 97:1-3)
சிறப்புகள்: 1. அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவு. 2. ரமளான் மாதத்தில் ஒரு இரவு 3. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு.

அது எந்த இரவு?:
'..ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி - 722)

'நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவர்களுடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப்பத்து நாட்களில் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூற்கள்: முஸ்லிம், அஹ்மது)

மேற்கண்ட ஹதீஸ்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.

'லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

இந்த ஹதீஸில் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் அது இருக்கிறது என்றும் மேலும் சில ஹதீஸ்களில் குறிப்பிட்ட நாளின் இரவில் அது இருக்கிறது என்றும் வந்துள்ளது. இருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டதால் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் தேடுவதே சிறந்ததாகும்.

லைலத்துல் கத்ரை தேடுவது:

'நபி (ஸல்) அவர்கள் மற்ற நாட்களில் முயற்சிக்காத அளவு கடைசிப் பத்து நாட்கள் முயற்சிப்பார்கள்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: இப்னுமாஜா, அஹ்மது, திர்மிதி 726)

லைலத்துல் கத்ர் இரவில் வணக்க வழிபாடு:

'ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரை (வணக்கத்தில் ஈடுபடுவதற்காக) விழித்திருக்கச் செய்வார்கள்' இதை அலி (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி 725, அஹ்மது)

(இஃதிகாப்) பள்ளியில் தங்குதல்:

'நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்'. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: திர்மிதி 720, அஹ்மது)

இரவு வணக்கமும் பாவமன்னிப்பும்:

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி 619, அபூதாவூது, முஅத்தா)

லைலத்துல் கத்ரின் துஆ:

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي

பொருள்: 'இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!'


லைலத்துல் கத்ர் இரவின் முழுமையான பயனை அடைந்து கொள்ள ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் முயற்சிப்போமாக! அதற்கு அல்லாஹ் நமக்கு உதவிடுவானாக!

காஃபிர்களுடன் நடந்து கொள்ளும் முறை

இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர ஏனைய மதங்களும் இஸங்களும் அசத்தியமானவை. அவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் காஃபிர்களாவர். இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம். அதை பின்பற்றக்கூடியவர்கள் முஃமின்கள், முஸ்லிம்களாவர்.

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன்: 3:19)

‘இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவனிடமிருந்து அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக இருப்பான். (அல்குர்ஆன்: 3:85)

இதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத அனைவருமே காஃபிர்கள் என்று ஒரு முஸ்லிம் கருத வேண்டும். காஃபிருடன் பின்வரும் ஒழுக்கங்களைப் பேணி நடக்க வேண்டும்.
1. அவனுடைய நிராகரிப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதைப் பொருந்திக் கொள்ளவும் கூடாது. ஏனெனில் இறைநிராகரிப்பை பொருந்திக் கொள்வதும் இறைநிராகரிப்பாகும்.

2. அவனை வெறுக்க வேண்டும். அல்லாஹ் அவனை வெறுப்பதனால். ஏனெனில் விருப்பும் வெறுப்பும் அல்லாஹ்வுக்காகவே இருக்க வேண்டும். தன்னை நிராகரிக்கின்றான் என்பதற்காக அல்லாஹ் அவனை வெறுக்கும் போதெல்லாம் அல்லாஹ் வெறுக்கிறான் என்பதற்காக ஒரு முஸ்லிமும் அவனை வெறுக்க வேண்டும்.

3. அவனை நேசிப்பதும் அவனிடம் நட்பு கொள்வதும் கூடாது. எனெனில் அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கையாளர்கள் (தங்களைப்போன்ற) இறைநம்பிக்கையாளர்களை விடுத்து இறைநிராகரிப்போரை (ஒருபோதும் தம்) நேசர்களாய் ஆதரவாளர்களாய் ஆக்கிக் கொள்ள வேண்டாம். (அல்குர்ஆன்: 3:28)

அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை வைத்திற்கும் மக்கள், அல்லாஹ்வையும் அவன் தூதரையும் எதிர்ப்பவர்கள் மீது அன்பு செலுத்துவதை (நபியே!) நீர் காணமாட்டீர், அத்தகையோர் அவர்களின் தந்தையராயினும் அல்லது அவர்களின் தனயர்களாயினும் அல்லது அவர்களுடைய சகோதரர்களாயினும் அல்லது அவர்களுடைய குடும்பத்தினராயினும் சரியே! (அல்குர்ஆன்: 58:22)

4. காஃபிர் முஸ்லிமை எதிர்த்துப் போராடக் கூடியவனாக இல்லையென்றால் முஸ்லிம் அவனிடம் நீதமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வதுடன் அவனுக்கு நன்மையே செய்ய வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ, உங்களை உங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும் நீதியுடனும் நடப்பதை அல்லாஹ் தடுக்கவில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன்: 60:8)

5. பொதுவாக எல்லோரையும் போலவே அவனிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். உதாரணமாக அவனுக்குத் பசித்தால் உணவளிக்க வேண்டும். அவனுக்குத் தாகம் ஏற்பட்டால் தண்ணீர் கொடுக்க வேண்டும் அவன் நோயுற்றால் மருத்துவம் செய்ய வேண்டும். அல்லது அழிவிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டும். மேலும் அவனுக்கு ஏற்படும் துன்பம், தொல்லைகளை நீக்க வேண்டும்.

ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பூமியிலுள்ளவர்களுக்கு நீ இரக்கம் காட்டு. வானத்திலிள்ளவர்கள் உனக்கு இரக்கம் காட்டுவார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: தப்ரானி, ஹாகிம்

6. அவன் முஸ்லிமுடன் போரிடக்கூடியவனாக இல்லையென்றால் அவனுடைய பொருளுக்கும் மானமரியாதைக்கும் பங்கம் விளைவிக்கக் கூடாது.அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என் அடியார்களே! அநியாயம் செய்வதை எனக்கு நானே தடை செய்துள்ளேன். உங்களுக்கு இடையேயும் இதை தடை செய்திருக்கிறேன் எனவே உங்களில் ஒருவர் மற்றவருக்கு அநியாயம் செய்ய வேண்டாம். அறிவிப்பவர்: அபூதார்(ரலி), நூல்: முஸ்லிம்

7. அவனுக்கு அன்பளிப்பு வழங்குவதும் அவன் தரும் அன்பளிப்பை ஏற்றுக் கொள்வதும், அவன் யூத, கிறிஸ்தவனாக இருந்தால் அவனது உணவை உண்பதும் ஆகுமானதே.

‘வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவு உங்களுக்கு ஆகுமாக்கட்டிருக்கின்றது’ என அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்: 5:5)

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனுடைய விருந்திற்கு அழைக்கப்பட்டார்கள். அந்த அழைப்பை ஏற்று அவர்கள் தந்த உணவை உண்டிருக்கிறார்கள்.

8. முஃமினான பெண்ணை அவனுக்கு மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. ஆனால் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் பெண்களை மணந்து கொள்வது கூடும்.

அல்லாஹ் கூறுகிறான்: இறைவனுக்கு இணைவைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் கொள்ளும்வரை ஒரு போதும் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன்: 2:221)

‘முஃமினான நல்லொழுக்கமுடைய பெண்களையும் உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட நல்லொழுக்கமுள்ள பெண்களையும் விலைப் பெண்டிராகவோ ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது அவர்களுக்குரிய மஹ்ரைக் கொடுத்து மணமுடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது’. (அல்குர்ஆன்: 5:5)

9. அவன் தும்மி அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறினால் அவனுக்காக, யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹீ பாலகும் (அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டி உனது நிலையை சீர்படுத்துவனாக) என்று கூற வேண்டும்.

ஏனென்றால் நபி(ஸல்)அவர்களிடம் யூதர்கள் தும்பும் போது அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவார்கள் – யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக) என நபி(ஸல்) அவர்கள் தங்களுக்காக கூற வேண்டுமென எதிர் பார்த்தவாறு. ஆனால் நபி(ஸல்) அவர்களோ யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹீ பாலகும் என்றே கூறுவார்கள்.

10. அவனுக்கு முந்திக்கொண்டு ஸலாம் சொல்லக் கூடாது. அவன் ஸலாம் கூறினால் பதில் கூறலாம்.

அல்லாஹ் கூறுகிறான்: உங்களுக்கு (ஸலாம்) என்னும் வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதைப் போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள். (அல்குர்ஆன்: 4:86)

வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் வ அலைக்கும் என்று கூறுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) -புகாரி,முஸ்லிம்.

(குறிப்பு:- வேதக்காரர்கள் முஸ்லிம்களுக்கு ஸலாம் கூறினால் அஸ்ஸாமு அலைக்கும் (உங்கள் மீது நாசம் உண்டாகட்டும்) என்று கூறுவதுண்டு. அப்படிக் கூறும் போது மட்டும் வ அலைக்கும் (உங்கள் மீதும் நாசம் உண்டாகட்டும்) என்று பதில் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நபிமொழியில் ஆதாரம் உண்டு)

11. அவனைக் கடந்து செல்லும்போது பாதையின் ஒரத்திற்கு அவனைத் தள்ள வேண்டும்.

ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூத, கிறிஸ்தவர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் சொல்லாதீர்கள். அவர்களை நீங்கள் ஒரு பாதையில் சந்தித்தால் பாதையின் ஒரத்திற்கு அவர்களைத் தள்ளுங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்

12. (கலாச்சாரத்திலும் பழக்கவழக்கங்களிலும்) அவர்களுக்கு மாறு செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒப்பாக நடக்கக்கூடாது.

நபி(ஸல்) கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தினருக்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல்: அபூதாவூது.

நபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள்

“சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமாகும் எனக் கூறிய மார்க்கம் இஸ்லாமாகும்.

இதே வேளை, சிரிப்புத்தான் வாழ்க்கை எனும் அளவுக்கு ஒருவனது வாழ்வு அமைந்து விடக் கூடாது. எம்மைப் பார்த்துப் பிறர் சிரிக்கும் நிலைக்கும் எமது வாழ்வு இறங்கி விடவும் கூடாது. சிரிப்பு பிறர் மத்தியில் எமக்கிருக்கும் ஆளுமையைக் குறைத்து விடவும் கூடாது. இதுவும் கவனிக்கத் தக்கதாகும்.

பொதுவாக ஆன்மீகவாதிகள் என அறியப்பட்டவர்கள் பிறர் மத்தியில் அதிகம் சிரிக்க மாட்டார்கள். அது தமது இமேஜைப் பாதிக்கும் எனப் பயப்படுவர். மார்க்க ஈடுபாடுள்ள பலரும் சிரிக்காமலும், அதிகம் கதைக்காமலும் இருப்பதுதான் ஆன்மீகத்துக்கு அழகு என்று எண்ணுகின்றனர். எனவே, இவர்கள் பிறருடன் அதிகம் கதைப்பதில்லை; கலகலப்பாக இருப்பதில்லை. சிரித்தாலும் பதிலுக்குச் சிரிக்கக் கூடப் பஞ்சப்படுவார்கள்.

இருப்பினும், மிகப் பெரிய ஆன்மீகவாதியான நபி(ஸல்) அவர்கள் நண்பர்களுடன் சரி-சமமாகவும், சகஜமாகவும் பழகியுள்ளார்கள். எல்லாப் பணிகளிலும் தோழமையுணர்வுடன் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளார்கள். எப்போதும் அவர்களது பொன் முகத்தில் புன்னகை தவழ்ந்துகொண்டேயிருக்கும். அதிகமான சந்தர்ப்பங்களில் வாய் விட்டுச் சிரிக்க மாட்டார்கள். வாய் விட்டுச் சிரித்த சந்தர்ப்பங்களும் உள்ளன.

சிரிப்பு – அந்தச் சிரிப்பைச்
சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு!
என்றொரு சிரிப்புப் பற்றிய பழைய பாடலை அதிகமானவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். எந்தச் சிரிப்பைச் சீர்தூக்கிப் பார்க்காவிட்டாலும் நபி(ஸல்) அவர்களது சிரிப்பு அவசியம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாகும். நபிகளாரின் சிறிப்புப் பற்றிய ஆய்வின் மூலம் இஸ்லாமிய சட்டங்களை அறியலாம். இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையை அறியலாம். நபி(ஸல்) அவர்களது தூய ஆன்மீக வழிகாட்டலை அறியலாம். அவர்களது அற்புதமான பண்பாட்டை அறியலாம். குணத்தின் குன்றாகவும், பண்பாட்டின் சிகரமாகவும் அவர்கள் மிளிரும் அற்புதத் தன்மையை அறியலாம்.

இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் சிரித்த சில சம்பவங்களையும் அவற்றின் மூலம் நாம் பெரும் சட்டதிட்டங்கள், இஸ்லாமிய வழிகாட்டல்கள் குறித்தும் இந்தத் தொடரில் விபரிக்கலாம் என எண்ணுகின்றேன். நிச்சயமாக இது சுவையான, சுவாரஷ்யமான அனுபவமாக அமையும் என எண்ணுகின்றேன்.

தவறைச் செய்து விட்டு தர்மம் பெற்றுச் சென்றவர்:
“நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை!” என்றார். “தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “இல்லை!” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை!” என்றார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த “அறக்” எனும் அளவை கொண்டுவரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். “நான்தான்!” என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா(நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது, நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள். (புகாரி 1936)

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த நபிமொழி இஸ்லாமியச் சட்டமொன்றைத் தெளிவுபடுத்துகின்றது. நோன்பு என்பது அதிகாலை ஸுபஹின் ஆரம்ப நேரத்திலிருந்து மாலை மஅரிபின் ஆரம்ப நேரம் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவில் ஈடுபடாமலிருக்கும் ஒரு இபாதத்தாகும்.

நோன்பு நோற்ற நிலையில் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டால் அவர்;

-1- ஒரு அடிமையை உரிமை விட வேண்டும்.

-2- அதற்கு முடியாவிட்டால் 60 நோன்புகள் தொடராக நோற்க வேண்டும்.

-3- அதற்கும் முடியாவிட்டால் 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை இச்சம்பவத்தின் மூலம் அறிகின்றோம்.

இந்த அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் நோன்புடன் உடலுறவில் ஈடுபட்டவரிடம் பேசுகின்றார்கள்.

நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர் “நான் அழிந்து விட்டேன்!” என்று கூறிய போதிலும், நபி(ஸல்) அவர்கள் நிதானமாக “என்ன நடந்தது?” என்று கேட்கின்றார்கள். பதட்டத்துடன் வந்தவரது பதட்டத்தைப் போக்குகின்றார்கள். இந்த உரையாடலைத் தொடர்ந்து அவதானித்தால் நபி(ஸல்) அவர்களது நிதானமான போக்கையும், அன்பான அரவனைப்பையும் உணர முடியும்.

பொதுவாக, ஏதாவது “தவறு செய்து விட்டேன்; அதற்குப் பரிகாரமென்ன?” எனக் கேட்டு ஓர் ஆன்மீகவாதியை அணுகிக் கேட்டால் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திச் சாமிகள் அறுக்க முடிந்த வரை அறுத்து விட்டுத்தான் விடுவார்கள்.

குற்றங்களுக்கு இஸ்லாம் பரிகாரம் காணும் போது அந்தப் பரிகாரம் சமூகத்திற்குப் பயனுள்ளதாகவும் குற்றத்தில் ஈடுபட்டவருக்குப் பக்குவத்தை அளிப்பதாகவும் இருக்கும் வண்ணம் கவனம் செலுத்துகின்றது.

இந்த அடிப்படையில் “ஒரு அடிமையை விடுதலை செய்ய முடியுமா?” எனக் கேட்கின்றார்கள். அன்று மனிதர்கள் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு மிருகங்கள் போன்று சந்தைகளில் விற்கப்பட்டனர். அவர்கள் மிருகங்களை விட மிக மோசமாக நடத்தப்பட்டார்கள். பல குற்றச் செயல்களுக்கு இஸ்லாம் பரிகாரம் கூறும் போது அடிமை விடுதலையை வலியுறுத்தியது. அடிமையை வாங்கி, அவனை விடுதலை செய்வது சிறந்த நன்மையாக இஸ்லாத்தில் போதிக்கப்பட்டது.

இவர், அதற்கு “முடியாது!” என்றதும் “60 நோன்புகள் தொடராக நோற்க முடியுமா?” எனக் கேட்கின்றார்கள். இது குற்றம் செய்தவரை ஆன்மீக ரீதியில் பக்குவப்படுத்தும் பயிற்சியாகும். பல குற்றச் செயல்களுக்கு இதனை இஸ்லாம் பரிகாரமாக்கியுள்ளது.

ஏற்கனவே 30 நோன்புக்குள் குறித்த குற்றத்தைச் செய்து விட்டு வந்தவர் இவர். 60 நோன்புகள், அதுவும் “தொடராக நோற்க வேண்டும்!” என்று கூறிய போது, “அதற்கு நான் சக்தி பெற்றவனில்லை!” என்று கூறுகின்றார்.

“அதற்கு முடியாதென்றால் 60 ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமா?” என நபி(ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். தற்கால ஆன்மீகவாதிகள், தமது ஆசிரமத்திற்கு “அதை-இதைச் செய்! பாவம் தீர்ந்து விடும்! தீட்டுக் கழிந்து விடும்!” என்று கூறியே கோடி-கோடியாகச் சொத்துச் சேர்த்து வைத்துள்ளனர். இஸ்லாம், ஒருவன் குற்றம் செய்து விட்டால் அந்தக் குற்றங்கூடச் சமூகத்திற்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் எனப் பார்க்கின்றது. எனவே, 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டுமெனச் சட்டம் கூறுகின்றது. பொதுவாக ஏழைகளுக்கு உணவளிப்பதை இஸ்லாம் சிறப்பித்துள்ளது. பல குற்றச் செயல்களுக்குப் பரிகாரம் கூறும் போது 60, 10 ஏழைகளுக்கு உணவளிப்பதைப் பரிகாரமாக்கியுள்ளது. பொதுவாக விருந்துகள் என்று வந்து விட்டால் ஏழைகள் விடுபடுகின்றனர். செல்வந்தர்கள்தான் அழைக்கப்படுகின்றனர். இத்தகைய விருந்து முறையை இஸ்லாம் கண்டிக்கின்றது. ஏழைகள் விடுபட்டுச் செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் விருந்துதான் விருந்துகளிலேயே மோசமான விருந்தென்பது இஸ்லாத்தின் பார்வையாகும். இஸ்லாம் பரிகாரமாகக் கூறிய விருந்து என்பது செல்வந்தர் விடப்பட்டு, ஏழைகள் மட்டுமே கவனத்திற்கொள்ளப்படக் கூடிய விருந்தாகும்.

குறித்த இந்த 3 பரிகாரங்களையும் செய்ய முடியாத பரம ஏழையாகவும், பலவீனமானவராகவும் இவர் இருக்கின்றார். இருப்பினும் இவரது உள்ளம் தூய்மையான உள்ளமாகவும் இருக்கின்றது.

இவர் தூய உள்ளத்தையுடையவர் என்பது ஹதீஸில் நேரிடையாகக் கூறப்படாவிட்டாலும் நபி(ஸல்) அவர்களது பார்வை விசாலமானது. நுணுக்கமானது. இவரது பரிசுத்தத் தன்மையை நபி(ஸல்) அவர்கள் தனது விரிந்த பார்வையூடாகப் புரிந்துகொள்கின்றார்கள்.

இவர் தனது மனைவியுடன் உறவு கொண்டது இவருக்கும், இவரது மனைவிக்கும், அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த விடயமாகும். இதை இவர் மறைத்து விட்டு இவர் பாட்டில் இருந்திருக்கலாம். இருப்பினும் தற்செயலாகத் தவறு நடந்து விட்டது; நடந்த தவறுக்குப் பரிகாரம் காண வேண்டும் என இவரது உள்ளம் ஏங்குகின்றது. எனவேதான், வெட்கத்தையும் பொருட்படுத்தாமல் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தான் அழிந்து விட்டதாக அறிவிக்கின்றார். நபி(ஸல்) அவர்களைத் தனிமையில் சந்தித்துக் கூட இதை அவர் கூறவில்லை. நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் இருக்கின்றார்கள். இவரது உள்ளம் இவரையுறுத்தியதால் மக்கள் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் சபையில் வந்து நடந்ததைக் கூறிப் பரிகாரம் கேட்கின்றார் என்றால், இவர் பரிசுத்தமானவர் தானே! திட்டமிட்டுக் குற்றஞ்செய்யும் குணம் இவரிடமிருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டாரல்லவா?

ஒரு மனிதன், தான் செய்த தவறுக்காக வருந்துகின்றான் என்றால், அதற்கு உரிய முறையில் பரிகாரம் காண முற்படுகின்றான் என்றால், அதுவே பாவ மீட்சிக்கான வழியாக அமைந்து விடுகின்றது.

‘எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி நிர்ப்பந்திப்பதில்லை’ என்பது இஸ்லாத்தின் பொதுவான கோட்பாடாகும். குர்ஆனின் பல வசனங்கள் இந்தப் பொது விதியைப் பற்றிப் பேசுகின்றன. இந்தப் பொது விதி இங்கே கடைபிடிக்கப்படுகின்றது.

‘இவருக்கு எந்த வசதியும் இல்லை’ என்று கூறிய பின்னர் நபி(ஸல்) அவர்களே ஈத்தம் பழங்களைக் கொடுத்து தர்மம் செய்யச் சொல்கின்றார்கள். தர்மம் எமது குற்றங்களுக்குப் பரிகாரமாக அமையும்.

செய்ய வேண்டியதையெல்லாம் செய்து விட்டு, தர்மம் செய்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதற்காக இந்தக் கருத்தை இஸ்லாம் கூறவில்லை. தவறுதலாகக் குற்றம் நிகழ்ந்து விட்டால் அல்லது கடந்த காலக் குற்றங்களுக்குப் பரிகாரம் பெறுவதற்கு தர்மம் சிறந்த வழி என்பதையும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அந்த நபித் தோழரின் வறுமை நிலை புலப்படுகின்றது. “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழைக்கு, என்னை விடத் தேவையுடையவருக்கு தர்மம் செய்யச் சொல்கின்றீர்களா? மதீனாவில் இந்த இரு மலைகளுக்கு மத்தியில் என் குடும்பத்தை விட ஏழையோ, தேவையுடையவரோ இல்லை!” என்று கூறுகின்றார்.

அவர் பாவித்த வார்த்தையை இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால், என் மனைவியைப் போன்ற தேவையுடையவர் வேறு எவரும் இருக்க முடியாது என்ற கருத்தில் கூறுகின்றார். இவரது இந்த வார்த்தையைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் சிரிக்கின்றார்கள்; தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் வரை சிரிக்கின்றார்கள்.

பொதுவாக, ஒருவர் தவறு செய்தால் அவர் மீது கோபங்கொள்வதுதான் மனித இயல்பாகும். அதிலும் ஆன்மீகவாதிகள் தாம் பெரிய பக்குவப்பட்டவர்கள் என்பதைக் காட்டக் கடுமை காட்டுவர். குறிப்பாகத் தான் போதித்த போதனைக்கு ஒருவர் தவறு செய்து விட்டார் எனும் போது வெறுப்பு இன்னும் அதிகமாகும். அதனால் ஆரம்பம் முதல் இறுதி வரை நபி(ஸல்) அவர்கள் அம்மனிதரிடம் கோபத்தையோ, வெறுப்பையோ காட்டவில்லை. கரடு-முரடான வார்த்தைகளையோ, வசைபாடலையோ பயன்படுத்தவில்லை. கனிவான, அன்பான, அரவணைக்கும் தொணியிலேயே அவர்களது அணுகுமுறை அமைந்திருந்தது.

அவர் குற்றத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியது போன்றே பரிகாரத்தைக் கடைபிடிக்க முடியாத தனது கஷ்ட நிலையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியது போன்றே, தனது தவறையும் வெட்கமில்லாமல் வெளிப்படையாகவே கூறி விடுகின்றார். பரிகாரமாக அமையும் வண்ணம் நபி(ஸல்) அவர்கள் அளித்த பேரீத்தம் பழங்களையும் தனக்குத் தர வேண்டும் என்பதை இந்த வார்த்தைகள் மூலம் உணர்த்துகின்றார். அவர் ஒரு திறந்த புத்தகமாகத் திகழ்கின்றார்.

நபி(ஸல்) அவர்கள், அவரைப் பார்த்து “இதை உன் குடும்பத்திற்கே உண்ணக் கொடு!” என்கின்றார்கள். குற்றம் செய்தார்; அதற்குப் பரிகாரம் காண வந்தார். பரிகாரங்கள் எதையும் செய்ய முடியாத தனது பரிதாப நிலையைப் பகிரங்கமாகக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் கொடுத்த தர்மத்தைக் கூடப் பிறருக்குக் கொடுப்பதை விட, “அதற்குத் தானே தகுதியானவன்!” எனக் கூறினார். இதன் மூலம் குற்றஞ்செய்து விட்டு, தர்மத்தையும் பெற்றுக்கொண்டு வீடு சென்றார்.

இஸ்லாம் கூறும் பொது விதிகளில், கஷ்டம் இலகுவைக் கொண்டு வரும் என்பது ஒன்றாகும். இவரது கஷ்டம் இவருக்கு இலகுவை மட்டுமல்ல! பரிசையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

நபி(ஸல்) அவர்கள் வாய் விட்டுச் சிரித்த மற்றுமொரு சம்பவத்துடன் இன்ஷா அல்லாஹ் உங்களை மீண்டும் சந்திக்க அல்லாஹ் அருள் புரிவானாக!

அல்குர்ஆனும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் உலக மக்களின் இறுதி வழிகாட்டி

இது விரட்டப்பட்ட ஷைத்தான் வார்த்தை அல்ல. நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?

இது அகிலத்தாருக்கும் உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறில்லை (81:25-28)

அல்குர்ஆனைப் பற்றி அல்லாஹ் கூறும் தெளிவுரை இது!

இந்த உலகத்தில் பிறக்கின்ற வாழ்கின்ற எல்லா மக்களும் அல்லாஹ்வின் படைப்புகளே! பல இனத்தவர்களும் பல மொழி பேசும் மக்களும் பிரதேசத்தால் வேறு பட்டு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரை யும் படைத்தவன் அல்லாஹ்தான்.

அல்லாஹ்வின் உயர்ந்த படைப்பாகிய இந்த மனித சமூகத்திற்கு சத்திய வழியை நேரிய பாதையை காட்டுவதற்கு பல நபிமார் களை காலத்திற்கு காலம் அல்லாஹ் அனுப்பி வைத்து வேதங்களையும் இறக்கி வைத்தான்.

”மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற் செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான் (2:213).

எந்தவொரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பி வைத்தோம் (14:4).

இவ்வாறாக வந்த அல்லாஹ்வின் தூதுத் துவம் குறிப்பிட்ட சமூகங்களுக்கு மட்டுமே உரியதாக அமைப் பெற்றிருந்தது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வரு கையோடுதான் இத்தூதுத்துவம் அகிலத் தாருக்குரிய தூதுத்துவமாக நிலைநிறுத்தப் பட்டது.

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் மக்கத்து மக்களுக்குரிய அல்லது அரபு தீபகற்பத்துக்குரிய வேதமாக மட்டும் அருளாமல் முழு மனித சமுதாயத் திற்குரிய வேதமாக அருளினான். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உலக மக்களுக்குரிய இறுதி நபியாக அனுப்பி வைத்ததுடன் அல்குர்ஆனும் உலக பொதுமறையாக இறக்கப்பட்டது.

அல்குர்ஆன் ரமழான் மாதத்தில்தான் அருளப்பட்டது. ரமழானுடைய மகத்து வத்தை கூற வந்த அந்தக் குர்ஆனிய வசனத்தில்தான் உலக மக்களுக்கான நேர் வழி பற்றியும் எடுத்துச் சொல்லப்பட்டது. பொது மறை என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

”ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டி யாகவும் நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் நன்மை தீமையைப் பிரித் தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள அல்குர் ஆன் அருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்….” (2:185).

ரமழான் மாதத்தின் சிறப்பு நோன்பு நோற்பதனால் ஏற்பட்டதல்ல. அல்குர்ஆன் ரமழானில் அருளப்பட்டதால்தான் சிறப்புக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, அம்மாதத்தை அடைபவர் நோன்பு நோற் கட்டும் என குர்ஆன் விளக்கப்படுத்துகிறது.

இவ்வுலகில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் ஒரேயொரு வழியை காட்டக் கூடிய நன்மை தீமையை பிரித்தறிவிக்கக் கூடிய உலக பொதுமறையான அல்குர் ஆன் அருளப்பட்டதாக இந்த ரமழான் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டு முரிய வேதமல்ல என்கிற செய்தி மிகத் தெளிவாகவும் நேரடியாகவும் இத்திருமறை வசனத்தில் கூறப்படுகிறது. ரமழானில் அல்லாஹ்வுக்காக தன்னை அர்ப்பணித்து ஆன்மீகப் பயிற்சிகள் பெற்று பக்குவமுள்ளவர்களாக வளர்த்துக் கொள்ளும் முஸ்லிம்களுக்கு விடுக்கப்படும் இச்செய்தி மிக முக்கியமானதாகும்.

தங்களுக்கு மட்டுமுரிய வேதமாகவும் மார்க்கமாகவும் இந்த குர்ஆனையும் இஸ்லாத்தையும் வைத்துக் கொள்ளாமல் ஏனைய சமூகத்தவர்களுக்குரியதாகவும் எடுத்துக் காட்ட வேண்டிய பொறுப்பையும் இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது.

மேலே நாம் எடுத்துக் காட்டிய 81:25-28 வசனம் இதனை மேலும் தெளிவுபடுத்துகிறது.

உலகத்தார் யாவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறி விக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மத் நபியின்) மீது இறக்கியவன் (அல்லாஹ்) மிக்க பாக்கியமுடையவன். (25:1).

அலிப் லாம் றா, (நபியே! இது) வேத நூல். இதனை நாமே உம்மீது அருளி னோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்களுடைய இறைவனின் கட்டளைப் பிரகாரம் இருள்களிலிருந்து வெளியேற்றி பிரகாசத்திற்கும் புகழுக்குரிய மிகைத்தவ னான அல்லாஹ்வின் பாதையின் பால் நீர் கொண்டு செல்வதற்காகவும் உம்மீது அருளினோம் (14:1).

இது மனித குலத்திற்கு சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவன் இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டது) (14:52).

இந்த வசனங்கள் எல்லாம் அல்லாஹ்வின் வேதம் முழு மனித சமூகத்திற்குமுரியது என்று விளக்கப்படுத்தப்படுகிறது. முஹம்மத் நபியின் மீது இவ்வேதத்தை இறக்கியருளும் போதே அம்மக்களை வழிகேட்டிலிருந்து நேர்வழியின்பால் அழை த்து வருவதற்காகவே அருளப்படுவதாக அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

நபியே! நீர் கூறுவீராக! மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியது. அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவனே உயிர்ப் பிக்கிறான். அவனே மரணம் அடையும் படியும் செய்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய அவன் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள். அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார். அவரையே பின்பற்றுங்கள். நீங்கள் நேர்வழி பெறுவீர்கள் (7:159).

அல்லாஹ்வை கடவுளாக ஏற்று முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்று நேர்வழியின்பால் வாருங்கள் என்று தூதுத்துவத்தை உலக மக்களுக்குப் பிரகடனப்படுத்துமாறு நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு பொதுவாக அழைப்பு விடுத்தார்கள். அன்றைக்கு மக்கா மதீனாவை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கும் ஆட்சி புரிந்த மன்னர்களுக்கும் கடிதம் எழுதி இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தார்கள். மக்கள் கூடுகின்ற இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்தார்கள்.

இப்பணியினை நபிகளாருக்குப் பிறகு ஸஹாபாக்கள் செய்தார்கள். கலீபாக்கள் செய்தார்கள். இஸ்லாமிய தூது பரந்து சென்றது, வளர்ச்சி கண்டது.

இன்று அந்தப் பொறுப்பை நிறைவேற்றுபவர்கள் யார்? ஒரு சிலரை தவிர முஸ்லிம்களில் பெரும்பாலானோர் நிறைவேற்றத் தவறிவிட்டார்கள். துரதிஷ்டவசமாக மாற்று மத நண்பர்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் வீடுகளை நோக்கி வந்து அவர்களுடைய மார்க்கப் பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு பதிலளிக்கக்கூடிய திறமையுள்ளவர்கள் எத்தனை பேர்?

சகோதர சகோதரிகளே! முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பொறுப்பை உணர்ந்து கொள்வோம். புனித ரமழானை இதற்காக பயன்படுத்துவோம். முடிந்தளவு இஸ்லாமிய மார்க்கத்தினை வாழ்க்கையில் கடைப் பிடித்து அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து இஸ்லாத்தை புரியவைப்போம். அல்குர்ஆனையும் இறுதி தாதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும்அறிமுகப்படுத்துவோம். அவர்களுடைய சந்தேகங்களுக்கு பதிலளிக்கக் கூடியதாக மார்க்கத்தை சரிவர கற்றுக் கொள்வோம்.

எத்திவைப்பதுதான் எமது பணி! நேர்வழி காட்டுவது (ஹிதாயத் கொடுப்பது) அல்லாஹ்வின் பணி!