ஹஜ்ஜின்போது கட்டாயமாக தவிர்க்க வேண்டிய தவறுகள்


இஹ்ராம் அணிவதில் தவறிழைப்பது

1) சில ஹாஜிகள் ஜித்தா விமான நிலையத்தை அடையும் வரைக்கும் இஹ்ராம் அணிவதை தவிர்த்து விடுகின்றார்கள்அதாவது ஹஜ்ஜுச் செய்வதற்குண்டான நிபந்தனைகளில் தலையாததான இஹ்ராம் அணிதல் மற்றும் ஹஜ்ஜிற்கான நிய்யத் வைத்தல்இவற்றை அதற்குரிய மீகாத் என்ற எல்லைகளைக் கடப்பதற்கு முன்பாக நிறைவேற்றி விட வேண்டும் என்பது கட்டாயச் சட்டமாகும்ஆனால்சிலர் ஜித்தா விமான நிலைய எல்லையானதுமீகாத் அல்லவே என நினைத்துஜித்தா விமான நிலையத்தில் விமானம் இறங்கும் பொழுது இஹ்ராம் மற்றும் நிய்யத் வைக்காமல் இருந்து விடுகின்றார்கள்.

ஹஜ் மற்றும் உம்ரா செய்ய வருபவர்கள்அதற்குரிய எல்லைகளில் இஹ்ராம் அணிந்து விட்டு வருவதற்கு அந்தந்த பகுதிகளுக்கென்றே உள்ள எல்லைகளை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டி விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
எனவேஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புகின்ற ஒருவர்இந்தக் குறிப்பிட்ட எல்லைகளைக் கடக்கும் பொழுது இஹ்ராம் அணிந்திருப்பதுடன்ஹஜ்ஜுக்கான நிய்யத்தையும் வாயால் மொழிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இதுவன்றிகுறிப்பிட்ட மீகாத் எல்லைகளை இஹ்ராம் அணியாமலும்நிய்யத் செய்து கொள்ளாமலும் கடந்து விடுவாராகில்அந்த மனிதர் ஒரு பாவத்தைச் செய்தவராகி விடுகின்றார்இதற்குப் பரிகாரமாக அவர் ஒரு ஆட்டைப் பலி கொடுக்க வேண்டும்.
ஜித்தாவை மீகாத்தாகக் கொள்வது என்பதுஜித்தாவை இருப்பிடமாகக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே உரித்தானதாகும்எனவேஜித்தாவாசிகளுக்கான மீகாத் அவரவர் இல்லங்களேயாகும்.
இந்த சட்டம் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவேவெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ஒன்று தங்களது புறப்பாடு நடைபெறுகின்ற இடத்தில் வைத்து இஹ்ராம் அணிந்து கொள்வது மற்றும் நிய்யத் செய்து கொள்வதுஅல்லது விமானம் ஜித்தாவை நெருங்குவதற்கு சற்று 15 நிமிடங்களுக்கு முன்னால் இஹ்ராமை அணிந்து கொண்டுநிய்யத்தும் செய்து கொள்வதுஇது தான் மிகச் சிறந்த முறையாகும்.

2) சிலர் இஹ்ராமை அணிந்து கொண்ட பின்புகைப்படம் எடுத்துக் கொள்கின்றார்கள்இந்தப் புகைப்படத்தை தங்களது நண்பர்கள்உறவினர்களிடம் காட்டுவதற்கும்தங்களது ஞாபகார்த்தத்திற்காகவும் வைத்துக் கொள்கின்றார்கள்இது தவறானதொரு செயலாகும்ஏனென்றால்,

ஒருவர் அத்தியவசியமல்லாத ஒன்றிற்காக ஒருவர் தன்னைப் புகைப்படம் எடுத்துக் கொள்வதுஇறைத்தூதர் (ஸல்அவர்கள் காட்டித் தந்திருக்கும் வழிமுறைக்கு மிகவும் முரண்பாடான செயலாகும்இவ்வாறு புகைப்படம் எடுக்கக் கூடியவர்களை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழிகள் எச்சரிக்கின்றன என்பது குறித்து அவர்களுக்கு ஞாபகமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும்ஒரு நன்மையான காரியத்தைத் தொடங்குகின்ற ஒருவர்பாவமான காரியத்தைச் செய்து விட்டு நன்மையான காரியத்தைத் தொடங்குவது முரணான செயலாகும்.
இவ்வாறு நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுபிறரிடம் காட்டுவதன் மூலம் அதனைப் பார்க்கக் கூடியவர்என்ன இந்த மனிதர் ஹஜ்ஜுச் செய்து வந்து விட்டேன் என்பதைப் பெருமையடித்துக் கொண்டு திரிகின்றாரே என்று உங்களைத் தவறாகவும் எண்ணக் கூடும்இவ்வாறு பெருமையடிப்பதுஉங்களது வழிபாட்டிற்கான கூலியை – நன்மையைப் பாழடித்து விடும்இது நயவஞ்சகர்களது நிலையாகும்.

3) இன்னும் சிலர் இஹ்ராம் அணிய ஆரம்பித்த பொழுது எதனைத் தங்களுடன் வைத்திருந்தார்களோஅதாவது காலணிகள்பணம் மற்றும் தேவையான பொருட்களில் எதனை வைத்திருந்தார்களோ அதனை கடைசி வரைக்கும் அணிந்திருப்பது மற்றும் பயன்படுத்துவதுஇன்னும் இஹ்ராமை ஆரம்பிக்கும் பொழுது எதனைத் தன்னோடு வைத்திருக்கவில்லையோ அதனைப் பயன்படுத்த மறுப்பதுஇது மிகப் பெரும் தவறாகும்இஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் உங்களுக்குத் தேவைப்படும் எந்தப் பொருளையும் வாங்கலாம்பிறரிடம் பெற்றுக் கொள்ளலாம்இன்னும் இஹ்ராமைக் கூட மாற்றி அணிந்து கொள்ளலாம்இன்னொரு புதிய இஹ்ராமைக் கூட வாங்கி அணிந்து கொள்ளலாம்அதுபோல அணிந்திருக்கின்ற காலணிகள் தொலைந்து விட்டாலோ அல்லது பழுதாகி விட்டாலோ இன்னொரு காலணிகளை வாங்கி அணிந்து கொள்ளலாம்இவற்றில் எதுவுமே இஹ்ராமையோ அல்லது ஹஜ்ஜையோ பாதித்து விடாது.

இஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் இருக்கக் கூடிய ஆண்எப்பொழுதும் தனது தோள் புஜங்களை இஹ்ராமைக் கொண்டு மறைத்தே வைத்திருக்க வேண்டும்அவ்வாறல்லாமல்தோள் புஜங்கள் தெரிய விட்டுக் கொண்டு இருப்பது தவறாகும்தவாஃபின் ஆரம்ப மூன்று சுற்றுக்களில் மட்டுமே ஒருவருக்கு வலது தோள் புஜம் திறந்திருக்க வேண்டியது சுன்னத்தாகும்அதுதவிர மற்ற நேரங்களில் மூடியே வைத்திருக்க வேண்டும்.

4) சில பெண் ஹாஜிகள் இஹ்ராம் உடையானது ஒரு குறிப்பிட்ட கலரில் தான் அமைந்திருக்க வேண்டும் என்று நினைப்பது தவறாகும்உதாரணமாகபச்சை நிறம்பெண்களைப் பொறுத்தவரைஇஹ்ராம் அணிவதற்கு ஒரு குறிப்பிட்ட உடையோ அல்லது நிறமோ அவசியமல்லஅலங்காரம் செய்யப்பட்டஇறுக்கமான அல்லது உடலுறுப்புக்களை வெளிக்காட்டும் அளவில் உள்ள உடைகள் தான் அணிவதற்குத் தடை செய்யப்பட்டவைகள்இத்தகைய உடைகளை சாதாரண நாட்களிலும் இன்னும் ஹஜ்ஜின் பொழுது இஹ்ராமாகவும் அணியத் தடை செய்யப்பட்டிருக்கின்றன.


5) இன்னும் சில பெண்கள் இஹ்ராமின் பொழுதுதங்களது முகத்தை மூடிக் கொண்டிருக்கின்ற துணியை விலக்கி விட்டு விடுகின்றார்கள்இதுவும் தவறானதாகும்ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவிப்பின்படிபெண்கள் தங்களது முகத்தை அந்நிய ஆடவர் பார்க்காதிருக்கும் பொருட்டுமூடியே வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்முகத்தை மூடக் கூடிய துணிமுகத்தை மறைப்பது தவறாக மாட்டாது.


6) தொடக்கு நிலையில் உள்ள பெண்கள்மீகாத் எல்லைக்கு வந்து விட்ட பிறகு தங்களுக்கு தொடக்கு ஏற்பட்டு விட்டதை கண்டவுடன்நமக்குத் தான் தொடக்காகி விட்டதேஇனி நாம் மீகாத் எல்லையில் இஹ்ராம் மற்றும் நிய்யத் வைக்க வேண்டியதில்லைஇஹ்ராம் மற்றும் நிய்யத் செய்து கொள்வதற்கு தூய்மையான நிலை அவசியமாயிற்றே என்று கருதிஇஹ்ராம் மற்றும நிய்யத் செய்து கொள்ளாமலேயே மீகாத்தைக் கடந்து விடுகின்றார்கள்இது பொதுவாக நடைபெறுகின்ற தவறாகும்மாதாந்திரத் தீட்டானது ஒருத்தி இஹ்ராம் மற்றும் நிய்யத் செய்து கொள்வதற்குத் தடையாக அமையாதுஎனவேமாதாந்திரத் தீட்டுக் கண்ட பெண்மீகாத் எல்லையில் இஹ்ராம் மற்றும் நிய்யத் செய்து கொள்வதோடுதவாஃப் என்ற வலம் வருதலைத் தவிர ஏனைய ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளிலும் கலந்து கொள்ள வேண்டும்இது அவளது மாதாந்திரத் தீட்டி நிற்கும் வரைக்கும் இந்த நிலையில் தொடர்ந்திருக்க வேண்டும்.

ஒரு பெண்இஹ்ராம் மற்றும் நிய்யத் செய்யாமல் மீகாத் எல்லையைக் கடந்து விட்டாளென்று சொன்னால்அவள் மீண்டும் மீகாத்திற்குச் சென்று அங்கு வைத்து இஹ்ராம் அணிந்து பின் நிய்யத் செய்து கொண்டு மக்காவிற்குள் பிரவேசிக்க வேண்டும்அவ்வாறில்லா விட்டால்அவள் இதற்குப் பகரமாக ஒரு ஆட்டை பலி கொடுக்க வேண்டும்.
தவாபின் பொழுது

1) ஹாஜிகளில் பலர் தங்களது கைகளில் ஒரு குறிப்பிட்டதொரு வகைதுஆக்களைக் கொண்ட புத்தகத்தைத் தங்களது கைகளில் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்குழுவாக வரக் கூடிய மக்கள்இந்தப் புத்தகத்தைப் பார்த்து வாசிக்கஅவரைத் தொடர்ந்து வரக் கூடிய அவரது குழுவினர்கள் உரத்த குரலில் அவர் கூறக் கூடியதைத் திருப்பிச் சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள்இது இரு வகைகளில் தவறான செயலாகும்ஏனென்றால் :

அவர் எதனைத் துஆக்கள் என்று வாசித்துக் கொண்டிருக்கின்றார்களோஅதனை தவாஃபின் பொழுது வாசிக்க வேண்டும் என்று சொல்லி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தரவில்லைதவாஃபின் பொழுது கேட்பதற்கான சிறப்பான துஆக்கள் என ஏதுமில்லை.
கூட்டாகத் துஆக் கேட்பது மார்க்கத்தில் புகுத்தப்பட்டுள்ள நவீனம் அல்லது நூதனச் செயல் (பித்ஆஆகும்ஒவ்வொரு ஹாஜியும் தனக்குத் தெரிந்த துஆக்களை அல்லது தான் விரும்பும் துஆக்களை மிக மெதுவான குரலில் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

2) சில ஹாஜிகள் ருக்னுல் யமானி என்ற யமனி முனைக்கு முத்தம் கொடுக்கின்றார்கள்இந்த இடத்தை கைகளினால் தொடாலமே ஒழியமுத்தமிடக் கூடாதுமுத்தமிடுவதற்கென்று உள்ளது ஹஜருல் அஸ்வத் என்ற கறுப்புக் கல் மட்டுமேயாகும்இதனையும் கூட கூட்ட நெரிசலின் காரணமாக இயலாவிட்டால்கைகளினால் தொடுவது அல்லது சைகை செய்து விட்டுக் கடந்து செல்வது தான் நல்லதுஎனவேயமானி முனையைப் பொறுத்தவரை அதனைத் தொடலாமே ஒழிய முத்தமிடக் கூடாதுகூட்டமாக இருந்தால் தொடக் கூட அவசியமில்லை.


3) இன்னும் சிலர் ஹஜருவல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டும் என்பதற்காக பிறரை இடித்துக் கொண்டும் தள்ளிக் கொண்டும் செல்கின்றார்கள்இவ்வாறு செய்வது பிறரைத் துன்புறுத்துவதாகும்இதனால் பிறர் பாதிக்கப்படலாம் அல்லது பெண்களை இடித்து அல்லது அவர்கள் மீது விழுந்து விடவும் வாய்ப்பு ஏற்பட்டு விடும்இது மிகப் பெரும் தவறான செயலாகும்ஒன்று ஹஜருல் அஸ்வத் கல்லை முடிந்தால் பிறருக்குத் தொந்தரவில்லாமல் அதனை முத்தமிடுவது அல்லது தொடுவதுமேற்கண்ட இரண்டும் இயலாவிட்டால்அதனை நோக்கிச் சைகை செய்வதே மேலானதாகும்.

இறைத்தூதர் (ஸல்அவர்களின் சுன்னாவை நிறைவேற்றுவதற்குஇஸ்லாம் தடை செய்திருக்கின்றதொரு செயலைச் செய்து விட்டுத் தான் அதனை நிறைவேற்ற வேண்டுமாசிந்திக்க வேண்டும்.
முடிகளைக் களைவது
சிலர் ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றி விட்டவுடன்தலைமுடிகளில் சிலவற்றைக் கத்தரித்துக் கொள்வது போதுமென்று நினைக்கின்றார்கள்இது தவறானதாகும்ஒன்று தலைமுடியை முற்றிலும் சிரைத்து மொட்டையடித்துக் கொள்வது அல்லது தலைமுழுவதும் ஒரே அளவில் வெட்டிக் கொள்வது (மிஷின் உபயோகிப்பது). அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான், ''உங்களது தலைமுடியை மழித்துக் கொள்ளுங்கள் அல்லது வெட்டிக் கொள்ளுங்கள்"".., இங்கே சில முடிகளை மட்டும் வெட்டிக் கொள்வது என்பது அனைத்து முடிகளையும் வெட்டிக் கொள்வதற்கு ஈடாகாது.
அரஃபாத் நிகழக் கூடிய தவறுகள்

1) அரஃபாத் நுழையக் கூடிய ஒருவர்அரஃபாத்தின் எல்லைகளைக் காண்பிக்கக் கூடிய அறிவிப்புப் பலகைகளைப் பார்க்காமல்எல்லை எதுவென்றே தெரியாமல் நின்று கொண்டிருக்கின்றார்கள்அதாவதுஅவர்கள் அராஃபாவுக்கும் வெளியே சில போது நின்று கொண்டிருக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்இந்த நிலையில் இருக்கக் கூடிய ஒருவரது ஹஜ் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக மாட்டாதுஎனவேஹாஜிகள் இதில் அதிகக் கவனம் செலுத்திதாங்கள் நின்று கொண்டிருப்பது அரஃபாவின் எல்லைகள் தானா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும்.


2) சிலர் தாங்கள் நின்று கொண்டிருக்கக் கூடிய இடத்திலிருந்து அரஃபா குன்றைத் தங்களது கண்களால் பார்க்க வேண்டும் என்று விரும்புவதோடுஇன்னும் சிலர் தங்களை வருத்திக் கொண்டு அரஃபா மலைமீது ஏறக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்இது தேவையான செயலல்லஅவர் நின்று கொண்டிருக்கின்ற அரஃபா எல்லையே அவரது ஹஜ்ஜைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாகும்இறைத்தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள் : ''முழு அரஃபாவுமே நிற்பதற்கான எல்லைகள் தாம்"". இன்னும் சிலர் கஃபாவை முன்னோக்கித் தொழுவது போலஅரஃபா மலையை முன்னோக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்இதுவும் தவறானதாகும்கஃபாவை மட்டுமே தொழுகைக்கு முன்னோக்க வேண்டும்.


3) இன்னும் சிலர் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாகவே அரஃபாவை விட்டும் கிளம்பி விடுகின்றார்கள்அரஃபாவை விட்டுக் கிளம்புவது என்பதுசூரிய அஸ்மனத்திற்குப் பின்பு தான் நடைபெற வேண்டும்அவ்வாறு அஸ்தமனத்திற்கு முன்பாகக் கிளம்பக் கூடியவர்கள்ஹஜ்ஜின் முக்கியமானதொரு கிரியை விட்டு விட்ட குற்றத்திற்கு ஆளாவதோடுஅதற்காக அவர் ஒரு ஆட்டைப் பலியிட வேண்டும்இன்னும் பாவ மன்னிப்பும் கோர வேண்டும்இறைத்தூதர் (ஸல்அவர்கள்சூரிய அஸ்தமனம் வரைக்கும் அரஃபாவில் தங்கி இருக்கின்றார்கள்ஹஜ்ஜின் கிரியைகளிம் போதுஇவ்வாறே நடந்து கொள்ளும்படி தனது தோழர்களுக்கும் அவர்கள் ஏவியும் உள்ளார்கள்.

முஸ்தலிஃபாவில் நிகழக் கூடிய தவறுகள்
முஸ்தலிஃபாவை அடைந்தவுடன்அங்கு மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை சேர்த்துத் தொழுது விட்டுமறுநாள் சூரிய உதயம் வரைக்கும் அங்கு தங்கியிருக்க வேண்டும்சூரிய உதயத்திற்கு முன்பாக தங்களுக்குத் தேவையான துஆக்களைச் செய்து கொள்ள வேண்டும்அதனையடுத்து மினாவை நோக்கிச் செல்ல வேண்டும்ஹாஜிகளில் பெண்கள்குழந்தைகள் மற்றும் இயலாத வயோதிகர்கள் இன்னும் இத்தகையவர்களைக் கவனிக்கும் நிலையில் உள்ளவர்கள்நடுஇரவுக்குப் பின் மினாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுமுஸ்தலிஃபாவில் தங்கியிருக்கக் கூடிய ஒருவர் தான் முஸ்தலிஃபாவுக்கான எல்லைக்குள் தான் தங்கியிருக்கின்றோமா என்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தங்கி இருக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்இன்னும் சிலர் நடு இரவுக்கு முன்பதாகவே முஸ்தலிஃபாவை விட்டும் கிளம்பிமினாவுக்குச் செல்;லக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்இது தவறான நடைமுறையாகும்.
இத்தகையவர்கள்ஹஜ்ஜின் கிரியைகளில் குறைகளில் ஒன்றை விட்டு விட்ட குற்றத்திற்காக ஒரு ஆட்டைப் பரிகாரமாகப் பலியிட வேண்டும்அதற்காக பாவ மன்னிப்புக் கோரவும் வேண்டும்.
ஜமராத்தில் நிகழக் கூடிய தவறுகள்
ஹஜ்ஜின் பொழுது ஜம்ராக்களின் மீது (ஷைத்தானிற்குகல் எறிவது முக்கியமான நடைமுறையாகும்இந்த கிரியையானது முஸ்தலிபாவிலிருந்து இயலாதவர்களும் பெண்களும் கிளம்பி வந்து துல்ஹஜ் 11ன் அதிகாலைஇன்னும் மற்றவர்களுக்கான மதிய வேளையான 11ம் நாள் மற்றும் 12, 13ம் நாள்களில் கல் எறிய வேண்டியது அவசியமாகும்இருப்பினும் இதில் சிலர் தவறிழைத்து விடுகின்றார்கள்அதாவது,

1) முஸ்தலிபாவில் இருந்து கிளம்பக் கூடியவர்கள் நடு இரவு தாண்டுவதற்கு முன்பாக வந்து மினாவில் உள்ள மூன்று ஜம்ரத்களிலும் கல்லெறிவது அல்லது அதனை அடுத்து வரக் கூடிய 11 ம் நாளின் மதிய வேளை தாண்டுவதற்கு முன்பாக கல்லெறிந்து விடுவதுஆகிய தவறுகளைச் செய்து விடுகின்றார்கள்ஒன்று இதனை அந்தக் குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலே தான் செய்ய வேண்டுமே ஒழியஎந்த நேரத்திலும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றிருக்கக் கூடாதுதொழுகையை அதனதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தான் தொழ வேண்டுமே ஒழியநாமே தீர்மானித்திருக்கின்ற ஒரு நேரத்தில் தொழ முடியாதே..! இதைப் போலவே நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற
 நேரத்தில் தான் அதனதன் கிரியைகளைச் செய்ய வேண்டும்.

2) இன்னும் சிலர்ஜம்ரத்க்களினைக் கல்லெறியும் பொழுது வரிசைக் கிரமமாகச் சென்று எறிய வேண்டுமே என்றில்லாமல்தாங்கள் நினைத்தபடி கல்லெறிந்து விட்டு வந்து விடுகின்றார்கள்அதாவது முதலில் சின்ன ஜம்ரத்தையும்பின் நடு ஜம்ரத் இறுதியாக கடைசியில் உள்ள பெரிய ஜம்ரத்திற்கும் கல்லெறிய வேண்டும்இந்த வரிசைக்கிரமம் தவறிகல்லெறியக் கூடாது.


3) இன்னும் சிலர் தூரத்தில் நின்று கொண்டு கல்லெறிகின்றார்கள்இதனால் கல் விழக்கூடிய தொட்டியினுள் விழாமல் கல் தொட்டியை விட்டும் வெளியே விழுந்து விடுகின்றதுஇவ்வாறு எறிவதானது கல்லெறிவதற்குண்டான நிபந்தனையைப் பூர்த்தி செய்யாதுஇது அறியாமையும்பொடுபோக்குத் தனம் அல்லது கவனமின்மையின் காரணமாக நிகழக் கூடியதாகும்.


4) இன்னும் சிலர் முதல் நாள் கல்லெறிவதுடன்இரண்டாம் மற்றும் மூன்றாம் நாளுக்கான கல்லையும் எறிந்து விட்டுபொருளாதார வசதி மற்றும் இயலாமை காரணமாகதங்களது இருப்பிடங்களுக்கு அல்லது நாடுகளுக்குத் திரும்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்இன்னும் சிலர் தங்களுக்காக யாரையாவது கல்லெறிய நியமித்து விட்டுச் சென்று விடுகின்றார்கள்இது ஒரு விளையாட்டுத் தனமான செயலாகும்இவ்வாறு செய்வதன் காரணமாக ஷைத்தான் இத்தகையவர்களை வழிகெடுத்து விட்டான்மிகுந்த பொருட்செலவுகஷ்டம்உடல் உழைப்பு ஆகியவற்றை மேற்கொண்டு பல மைல்களுக்கும் அப்பால் இருந்து ஹஜ் செய்ய வரக் கூடியவர்கள்ஆக அதிகபட்சமான அனைத்து கிரியைகளையும் முடித்து விட்டுஇன்னும் சில ஒன்றிரண்டு நாட்கள் இருந்து ஹஜ்ஜின் மீதிக் கிரியைகளையும் நிறைவாகச் செய்து விட்டுச் செல்வதனை விட்டு விட்டும்பயண தவாஃபை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்பாகவே நிறைவேற்றி விட்டும் செல்வதுஇவ்வாறு செய்யக் கூடியவர்கள் தங்களது பயணத்திற்குத் தேவையான அளவு பண வசதியைப் பெற்றிருக்கவும் இல்லைஇன்னும் அதிகமான கஷ்டம் மற்றும் சிரமத்திற்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டதோடுஇவர்கள் ஹஜ்ஜையும் முழுமையாக நிறைவேற்றவும் இல்லை என்பது எவ்வளவு வருத்தத்திற்குரியது.


5) இன்னும் சில ஹாஜிகள் மினாவில் தரித்திருப்பதை தவறாகக் கணக்கிட்டு விடுகின்றார்கள். 10 ஆம் நாளும், 11ம் நாளும் என்று எண்ணிக் கொண்டு, 11 ஆம் நாள் அன்று கிளம்பி விடுகின்றார்கள்இது தவறானதுஏனென்றால்மினாவில் தரித்திரிப்பது என்பது 10 நாளைத் தொடர்ந்து வரக் கூடிய 11 மற்றும் 12 ம் நாளாகும்எனவே, 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் அல்லது 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் தங்கிஜம்ரத்களுக்கு கல்லெறிந்து விட்டுச் செல்வது சிறப்பானதாகும்.