ஜனாஸா தொழுகை

இஸ்லாத்தின் போதனைகள்
ஜனாஸா தொழுகையில் என்ன ஓதுவது நம்மில் நிறைய பேருக்கு தெரியாமலே இருக்கிறது !!!!!!! 


முதல் தக்பீருக்குப் பின்

முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்தியா) ஓத வேண்டும்

இரண்டாம் தக்பீருக்கு பின்

இரண்டாம் தக்பீர் கூறிய பின் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும் ””அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்

மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்

மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின் இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும் மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும் ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள் அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார் அறிவிப்பவர் அவ்ஃப் பின் மாலிக்(ரலி) நூல்- புஹாரி

பொருள்:

இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயக ! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக ! இவர் செல்லுமிட்த்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக !

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக ! பனிகட்டி ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக !

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக ! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவறுக்கு ஏற்படுத்துவாயாக !
இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக ! கப்ரின் வேதனையை விட்டும் நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக

காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ


காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ

காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.
ஆதாரம்: அஹ்மத் 49, 60, 77


اَللّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِوَشِرْكِهِ

அல்லாஹும்ம பா[F](த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி(B] வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப(B]குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்), அவூது பி(B](க்) மின் ஷர்ரி நப்[F]ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி

இதன் பொருள்:
இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும்,வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.

காலையிலும், மாலையிலும் 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை மூன்று தடவை ஓதினால் அதுவே அனைத்துக் காரியங்களுக்காகவும் ஒருவருக்குப் போதுமானது என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: நஸயீ 5333